பக்கம்:தாழம்பூ.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 45

மிஸ்டர் ரமணனும், அவர் மகள் பாமாவும் எழுந்தார்கள். இளங்கோ பாமாவை சோர்வோடு பார்த்தபோது, அவளோ, ‘யாமிருக்கப் பயம் ஏன்? என்பது போல் முருக தோரணையோடு உள்ளங்கையை நிமிர்த்திக் காட்டினாள். அவர்களோடு சேர்ந்து நழுவப்போன கணவனை “எங்கே போறlங்க” என்று பாக்கியம் அதட்டினாள். அவரோ, “ஒரே இருட்டா இருக்கு. அவங்களை விட்டுட்டுவாறேன்” என்று முன்னால் நடந்தார். இனிமேல் அவள் துங்கிய பிறகுதான் வருவார்.

இளங்கோ, சாய்வு நாற்காலியையே கட்டிவாக்கினான்.

இளங்கோ, திடீரென அம்மாவின் சத்தமும், ஒரு அந்நிய சத்தமும், கூட்டாகவும், தனித்தனியாகவும் ஒலிப்பதைக் கண்டு எழுந்து பார்த்தான். நடு வீட்டிற்குள் வந்து அந்த வீட்டை ஏற இறங்கப் பார்க்கும் அந்தப் போலீஸ்காரரை உற்றுப் பார்த்தான். அவர் வேறு யாரும் இல்லை. தெருவோர கரும்பு வியாபாரியிடம் செங்கோல் செலுத்தினாரே அவரேதான். அம்மா அழாக்குறையாகக் கத்தினாள்:

“ஒங்கக் கொடுமைக்கும் ஒரு அளவு வேண்டாமாய்யா? அந்த அநியாயக்காரியத்தான் உங்களால ஒண்ணும் செய்யமுடியல. ஒதுங்கிப் போறவனையாவது விட்டுத் தொலைக்கலாமே.”

“நீங்க எது சொல்லணுமுன்னாலும் ஸ்டேஷன்ல வந்து சொல்லுங்க”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/59&oldid=636809" இலிருந்து மீள்விக்கப்பட்டது