பக்கம்:தாழம்பூ.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தாழம்பூ

“நான் அனுப்பி வைக்காட்டி?” ‘போலீஸ் மீறுறவங்களை எப்படி பிடிக்கணுமுன்னு வேலூர்லேயும்,கே.கே.நகர்லேயும் டிரெயினிங்கொடுத்திருக்காங்க” “அவனை எதுக்காகக் கூப்பிடுறிங்கன்னு எனக்கு முதல்ல தெரிஞ்சாகனும்.”

“ஏதோ ஒருரு பொண்ணு, சரோசாவோ, ரோசாவோ, இவரு அவள கீழே பிடிச்சுத் தள்ளி ரத்தக் காயம் உண்டுபண்ணிட்டாராம். அதுக்கு முன்னால கற்பழிக்க முயற்சி செய்தாராம். இந்த இரண்டும் சீரியஸ்ஸான விவகாரம். அதனாலதான், இன்ஸ்பெக்டர் இவர கையோட கூட்டிட்டு வரச்சொன்னார். யாரு பக்கம் நியாயம் இருக்கு என்கிறது எனக்கு முக்கியமில்லை. இவர கையோட கூட்டிக்கிட்டுப் போறதுதான், முக்கியம்.”

‘கான்ஸ்டபிள் சார், இது அநியாயம் சார். நான் ஒரு பாவமும் அறியாதவன் சார். இப்படி நடக்குமுன்னு தெரிஞ்சிருந்தால், ஒதுங்கிப் போயிருப்பேன் சார்.”

“எது பேசணுமுன்னாலும் ஸ்டேஷன்ல வந்து பேகங்க '6Yu( _fi;”

“சரி காலையில வாறேன்.” “இல்ல, இப்பவே வரணும். வந்தாகணும்.” அந்தப் போலீஸ்காரர் இளங்கோவை அந்த இரவில் கையோடு கொண்டு போகாமல் போகப் போவதில்லை என்பதுபோல், அங்கேயே - அந்த நடு வீட்டுலேயே லத்திக் கம்பை ஊன்றியபடி நின்று கொண்டிருந்தார்.

இளங்கோவிற்கு, தலைக்கு மேல் வெள்ளம் போன துணிச்சல்; அதுவும் கரும்புச் சாருக்காரனை சக்கையாக்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/60&oldid=636811" இலிருந்து மீள்விக்கப்பட்டது