பக்கம்:தாழம்பூ.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தாழம்பூ

அந்தத் தாய், இப்போது பருந்து போல் வீறாப்புக் கொண்டாள். இளங்கோவின் கையைப் பிடித்துக் கொண்டு இடது பக்கமாக நடந்தாள். வலது பக்கம் கால் வைத்திருந்த போலீஸ்காரரும், அவர்களுக்குப் பின்னால் நடந்தார்.

தாயும், மகனும் ஒரு பெரிய பங்களாவிற்குள் நுழைவதைப் பார்த்துவிட்டு, போலீஸ்காரர் வருத்தப்பட்டார். கஷ்டப்பட்டார். புத்தியை கடன் கொடுத்து விட்டோமே என்பது போல் தொப்பியை சொறிந்தார். இதற்குள் மிஸ்டர். ரமணனும், பாமாவும் சத்தம் கேட்டு வெளியே வந்தார்கள். இளங்கோ இப்போது வீறாப்பாய் பேசினான் :

“நான், என்னை வழிமறித்த பொண்ணைத் தள்ளாமல் அவள் முன்னால தோப்புக்கரணம் போட்டிருக்கணுமாம். அவள் இரும்புக் கம்பிய திருடினதத் தடுக்காமல் எங்க வீட்டுல இருக்கிறதையும் எடுத்துக் கொடுத்திருக்கணுமாம். அப்படிச் செய்யாததுனால என்னை, ராத்திரியோடு ராத்திரியா விசாரிக்கப் போறாங்களாம்.”

பாமா கத்தினாள் :

“டாடி, இது டு மச். உங்க டெப்டி கமிஷனர் பிரண்டுக்கு போன் செய்யுங்க. இல்லாட்டி கமிஷனர் கிட்ட, நானே பேசப்போறேன்.”

பெரிய பெரிய வார்த்தைகளைக் கேட்ட போலீஸ்காரர் சிறிது சுதாரித்து, கையில் பிடித்திருந்த லத்திக்கம்பை முதுகோடு முதுகாக மறைத்துக்கொண்டார். இதற்குள் இளங்கோவின் தந்தை கப்பையா, அந்தப் போலீஸ்காரரையே கமிஷனராய் அனுமானித்து பணிவன்புடன் சொன்னார் :

“சார் நீங்க வாங்க... தப்பில்ல. எந்த வீட்டுக்கும் எந்த நேரத்திலயும் வர்றதுக்கு உங்களுக்கு ரைட் இருக்கு. இப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/64&oldid=636815" இலிருந்து மீள்விக்கப்பட்டது