பக்கம்:தாழம்பூ.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 51

யூனிபார்ம்ல வராமல் மப்டியில் வந்திருக்கலாம். இதுவும் தப்பில்லதான்.”

“என்ன அங்கிள் சம்பந்தம் இல்லாமல் பேசறிங்க! போலீஸ்காரர் காலிலயே விழுந்துடுவீங்க போலிருக்கே. இளங்கோவை கேவலப் படுத்தணுமுன்னுதானே, இவரு யூனிபாரத்துல வந்திருக்கார்,டாடி, இன்னுமா உங்களுக்கு லைன் கிடைக்கல?”

ரமணன் டெலிபோனை சுற்றோ சுற்று என்று கற்றி, டெபுடி கமிஷனரை எப்படியோ, கையும் டெலிபோ ணுமாகப் பிடித்து விட்டார்.

“ஹலோ! நான்தான் மிஸ்டர் ரமணன். தப்புத்தான். என்னை நானே மிஸ்டர்ன்னு சொல்லிக்கக் கூடாதுதான். உங்கள மாதிரிதான் அமெரிக்காவில இருக்கிற என்னோட மகனும் அடிக்கடி சொல்லுவான். அப்புறம் ஒரு விஷயம். போலீஸ் எங்க ஏரியாவிலே போலீஸாவே இல்ல. ஒகே! சொல்ல வேண்டியத ஒரு நிமிஷத்துல என்ன, அரை நிமிஷத்திலேயே சொல்லிடறேன்.”

ரமணன், - இளங்கோவிற்கு காலையிலிருந்து அந்த இரவு வரை ஏற்பட்ட சோதனைகளை விளக்கினார். அந்த ஏரியாவில் ஒரு குழந்தை காணாமல் போனதையும், பல பொருட்கள் திருட்டுப் போனதையும், இவைபற்றி அவ்வப்போது காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தாலும், அவை போன இடம் தெரியவில்லை என்பதையும் விள்க்கினார். இப்போது ஒரு கான்ஸ்டபிள் கையும் லத்தியுமாய் நிற்பதையும் சொன்னார். பிறகு, “ஹலோ, தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.

‘இன்னும் பத்து நிமிஷத்துல திருப்பி டெலிபோன் செய்யறதா சொல்லியிருக்கார்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/65&oldid=636816" இலிருந்து மீள்விக்கப்பட்டது