பக்கம்:தாழம்பூ.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தாழம்பூ

‘அப்படின்னா, உங்க டெலிபோன் நம்பரை அவர் கேட்டுருக்கனுமே டாடி! நீங்கதான பேசிக்கிட்டுப் போனிங்க, நீங்க பேசி முடிச்சதும் மூணு செகண்ட்ல அவரு டெலிபோனை வைச்சுட்டாரே”

“போலீஸ் ஆபீசருங்க எப்பவுமே அப்படித்தான். கட் அன்ட் ரைட்டாத்தான் இருப்பாங்க”

இதற்குள் போலீஸ்காரர், அந்த வீட்டையும் அவர்களையும் ஆழம் போட்டார். ஒன்பது நிமிடம் ஐம்பது வினாடி வரை பொறுமையோடு இருந்தார். பத்தாவது நிமிடம் படபடப்பானார்.

“சார், எனக்கு டைம் ஆகுது. குற்றவாளிய என்னோட அனுப்பி வைச்சிங்கன்னா, உங்களுக்கும் நல்லது.”

“வேனும்னா விலங்கு போட்டு இழுத்துக்கிட்டுப்போய்யா. நீ இவர ஸ்டேஷன் வரைக்கும்தான் இழுக்க முடியும். நான் உன்ன சிட்டி முழுக்க இழுப்பேன். என்ன நினைச்சுக்கிட்ட?”

ரமணன் போட்ட சத்தத்தில் நியாயம் இருப்பது போல் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு போலீஸ்காரர், பேசாமல் நின்றார். இதற்குள் டெலிபோன் மணி ஒலித்தது. ரமணனும், பாமாவும் போட்டி போட்டு ஓடினார்கள்.

பாமா எடுத்த டெலிபோனை ரமணன் வாங்கிக் கொண்டு “எப்படி என் டெலிபோன் நம்பரை கண்டுபிடிச்சீங்க?” என்றார்.

“ஹலோ, தேங்கயூப்பா. சார், சாரி! தேங்க்யூ சார். எங்க ளைபடுல நியாயம் இருக்கிறதாலதான், நீங்க தலையிடுறீங்கன்னு எனக்குத் தெரியும். என்ன? சரோசாவ பத்தி உங்களுக்கும் தெரியுமா? தெரிஞ்சிக்கிட்டுமா இவ்வளவு நாளும் விட்டு வைச்சீங்க? சார். அது உங்க விவகாரம்தான். எங்களுக்கு இப்போ நியாயம் கிடைக்கிறதைவிட அநியாயத்துல இருந்து பாதுகாப்புக் கிடைச்சாலே போதும். இந்த கான்ஸ்டபிள் இன்னும் இங்கேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/66&oldid=636817" இலிருந்து மீள்விக்கப்பட்டது