பக்கம்:தாழம்பூ.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 53

நிற்கிறார். ஒகே. ஒகே அப்புறம் நீங்கரிடையர் ஆன பிறகாவது வகுப்புல பேசினது மாதிரி உங்கள “டா” போட்டு பேசலாமா? யெஸ். பிரதர், நீங்க பிளபிதான். குட் நைட்.”

ரமணன் ஆனந்தப் பள்ளுப் பாடினார் :

‘நம்ம ஏரியாவில நடந்த திருட்டுக்களைப் பத்தி இதுவரைக்கும் கொடுத்த புகார்களோட நகல்களை எடுத்துக்கிட்டு நாளைக்கி இன்ஸ்பெக்டரை போய் பார்க்கணுமாம். அப்படியும் நமக்கு திருப்தி வராட்டால், இவரையே போய் பார்க்கலாமாம். இன்ஸ்பெக்டரை தாளிச்சிருப்பார் அவர் பேச்சுல அப்படி ஒரு வாடை தெரிஞ்சுது.”

ரமணன், மகள் இன்னும் தன்னை பெரிதாக நினைக்கவில்லையே என்று ஏக்கத்தோடு அவளைப் பார்த்தபோது, அவள் இளங்கோவை ஆறுதலாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். போலீஸ்காரருக்கு இருப்பதா போவதா என்ற சந்தேகம். அங்குமிங்குமாய் நடமாடிக் கொண்டிருந்த போது, மீண்டும் ஒரு டெலிபோன், கரகரப்பான குரல். ரமணன் அதை வாங்கி, அந்த கான்ஸ்டபிளிடம் கொடுத்தார். அவரும் “அய்யா. அய்யா. சார். சார். அப்படியே. சார். அப்படியே. சார்” என்று சொல்லிவிட்டு, டெலிபோனை வைத்தார். பிறகு விறைப்பாக ஒரு சல்யூட் அடித்தார். “அவளை விடப்பிடாது சார் நீங்க கொடுக்கிற கம்ப்ளைன்ட்ல அவளும் தேறப்பிடாது, அந்த சப்-இன்ஸ்பெக்டரும் தேறப்படாது” என்று சொல்லிவிட்டு, இளங்கோவைப் பார்த்து இரண்டு சல்யூட்களும், பாக்கியம்மாவைப் பார்த்து மூன்று சல்யூட்களும் அடித்துவிட்டு, கப்பையாவை ஒரு முறைப்பு முறைத்து விட்டு கழன்று கொண்டார்.

ரமணன், பெருமை பிடிபடாமல் பேசினார் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/67&oldid=636818" இலிருந்து மீள்விக்கப்பட்டது