பக்கம்:தாழம்பூ.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 55

பாமா, இளங்கோவை தனது அறைக்குள் கூட்டி வந்தாள். இயற்கைக் காட்சிகளைக் கொண்ட கட்டவுட் ஒரு பக்கம்; வீணையோடு நாதம் இசைக்கும் சரஸ்வதியின் உருவம் பொறித்த திரைச்சீலை. டு இன் ஒன். ஒரு சின்ன டி.வி. செட். அறை முழுவதும் ஒரே சென்ட் வாசனை.

சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்று கேட்கப்போன இளங்கோ, பசியை மறந்தான். தன்னையறியாமலேயே சொன்னான் :

“உங்களுக்கு கொண்டை போட்டால் நல்லாயிருக்கும். ஏன்னா உங்கமுகம் ஒவல் இல்லை.அளவுக்கு மீறிரவுண்ட் அதோட நீங்க கொஞ்சம் குள்ளம், கொஞ்சந்தான். அதனால கொண்டைய மேல்நோக்கிப் போட்டால், உங்களை உயர்த்திக் காட்டும்.”

“இதெல்லாம் எப்படித் தெரிஞ்சிக்கிட்டீங்க?” “இப்போதைக்கு சஸ்பென்ஸ்” அவள், அவனையே வைத்த கண் வைத்தபடி சிரித்தாள்.

‘சரி புறப்படுங்க. நாளைக்குத்தான் டைப் அடிக்கப் போறேன். இப்போ அடிச்சால் தப்புத்தப்பா வரும். ஆனாலும் ஒன்று, உங்களை அவள் அடிச்சது எனக்கு இன்னும் வலிக்குது. அவளுக்கு ஆறு வருஷம் வாங்கிக் கொடுக்கிறது, என்னோட பொறுப்பு தைரியமா போங்க”

இளங்கோ, அவளைப் பார்த்தபடியே எழுந்து நடந்தான். அவள் கொடுத்த காதல் சமிக்ஞைகள் அவனுக்கு டூயட்மாதிரியான கற்பனையை தரவில்லை. அந்த சேரிப் பெண் ஆறு வருடம் உள்ளேயிருக்கப் போகிறாள் என்ற ஒரு ஆனந்தத்தில் அன்று நடந்த அத்தகைய சோதனைகளும், சாதனைகளாய் ஆனது போல் ஒரு அகரத் திருப்தியோடு நடந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/69&oldid=636820" இலிருந்து மீள்விக்கப்பட்டது