பக்கம்:தாழம்பூ.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

v

என்றாலும், ஜனரஞ்சக எதிர்ப்பாளர்கள் எதற்கும் துணிந்தவர்கள், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன் ஆகியோரையும் கைகழுவி விடுவார்கள். அவர்களுக்கும் இலக்கியத் தரம் இல்லை என்று ‘கத்த” வாதம் செய்து விடுவார்கள். அவசியமானால் “கம்பனுக்கும் கல்தா கொடுப்பார்கள்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் “கார்க்கி’ பத்திரிகையை அன்று நடத்திய கவிஞர் இளவேனில் ஒரு வேடிக்கையைச் செய்தார், வார்த்தைகளை வைத்து விளையாடி, ஒரு புதுக் கவிதை எழுதினார். அதன் பொருள், அவருக்கே தெரியாது. ஆனால், ஏதோ ஒரு கலையம்சமோ அல்லது கருத்து அம்சமோ இருப்பதுபோல் ஒரு பாசாங்கு செய்யும் அந்தக் “கவிதை” கணையாழிக்கு அனுப்பப் பட்டது.எழுதியவரின் பெயர்.அசத்தலாக இருந்தால்தான் கவிதைக்கு மவுசு என்று கருதி, கவிஞர். இளவேனில், அருப சொரூபன் என்ற பெயரில் அனுப்பி வைத்தார். எழுதியவருக்கே தெரியாத பொருள், கணையாழி ஆசிரியருக்குப் புரிந்தது. அந்த கவிதையை தனது பத்திரிக்கையில் வெளியிட்டார். பின்னர் இளவேனில், இவர்களின் பொய் முகத்தை கட்டிக் காட்டினார். புரியாமல் எழுதினால், அதை இவர்கள் உயர்ந்தது என்று அங்கீகரிப்பார்கள் என்பது நிரூபித்துக் காட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சி, இவர்களின் இலக்கியத்தரம், கனம், ஆழம் முதலியவை இவர்களின் போலித்தனத்திற்கு ஒரு அளித்தார அலங்கோலத்தையே காட்டும்.

ஒரு படைப்பு ஜனரஞ்சமாக இருப்பாதலேயே, தன்

இலக்கியத் தரத்தை இழந்து விடாது என்பது திண்ணம். ஒரு படைப்பின் ஜனரஞ்சக அம்சம், அதன் இலக்கிய அந்தஸ்துக்கும்

குறுக்கே நிற்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/7&oldid=636821" இலிருந்து மீள்விக்கப்பட்டது