பக்கம்:தாழம்பூ.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவர், இரவில் துங்கும்போது எந்த எண்ணம் கடைசியில் மனதில் நிற்கிறதோ, அதுதான் மீண்டும் கண் விழித்ததும், மனதில் முதலாவதாக வரும் என்பார்கள். அன்று இரவு முழுவதும் அப்படியே தூங்கிப் போன இளங்கோவின் மனதில் காலையில் எடுத்த எடுப்பிலேயே சரோசா இரும்புக் கம்பிகளுக்கிடையே கையில் விலங்கிடப்பட்டு, அவனைப் பார்த்து தலைகவிழ்ந்து நின்றாள். அதற்குப் பிறகு தான், பாமா லேகலேசாக தலையில் கொண்டை போட்டுக் காட்டும் பாவனையோடு, எட்டியெட்டிப் பார்த்தாள்.

இளங்கோ, அம்மா நீட்டிய இட்லிகளை விழுங்குவது தெரியாமல் விழுங்கிவிட்டு, பேண்ட் சட்டையை அவனைப் போல் வீறாப்பாக இழுத்துக்கொண்டு,வெளியே புறப்பட்டான். அவனுக்கு ‘சப்’ என்றாகிவிட்டது. பாமா வீட்டிற்குப் போவதற்கு அவன் படியிறங்கியபோது, அவள் அப்பாரமணனோ,மாருதி காரில் அங்கே வந்தார். கதவைத் திறந்து அவனை ஏறிக்கொள்ளும்படி சைகை செய்தார். இதற்குள், பாமாபின்பக்கமாகவந்துகைகளைப்பிடரிக்குக் கொண்டு போய் தலைமுடியை தலைக்குமேல் கொண்டுவந்து அவனைப் பார்த்துச் சிரித்தாள். அம்மா ஒருபக்கமும், இன்னொரு பக்கம் பாமாவும் கையசைத்து வழியனுப்ப மாருதி கார் அந்தப் பெயருக்குரிய வேகத்தில் பறந்தது.

அந்தக் கார், காவல்நிலைய வளாகத்திற்குள் நுழைந்ததும், நேற்றிரவு வீட்டிற்கு வந்திருந்தாரே அதே போலீஸ்காரர் அவர்களைப் பார்த்து அலறியடித்துக் கதவைத் திறந்தார். எந்தப் போலீஸ்காரராலும் இப்படி ஒரு மரியாதைக்குட்படாத ரமணன் உடம்பை நெளித்து நடப்பதோ அல்லது அக்கம்பக்கம் பார்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/70&oldid=636822" இலிருந்து மீள்விக்கப்பட்டது