பக்கம்:தாழம்பூ.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 57

நடப்பதோ கவுரவக்குறைவு என்று நினைப்பது போல், லகான் போட்ட குதிரைபோல் நேராக நடந்தார். இளங்கோ, அவர் பின்னால் ஆட்டுக்குட்டி போல் போனான். இருவரும் கிரைம் அறைக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்த அதே சப்-இன்ஸ்பெக்டர் விழுந்தடித்து நின்றார்.

“உட்காருங்க... மிஸ்டர் ரமணன் சார். இளங்கோ! நீங்களும் உட்காருங்க..”

“ஒயர் ஈஸ் யுவர் இன்ஸ்பெக்டர்..? இன்ஸ்பெக்டரை நான் பார்க்கலாமா..?”

“உங்களுக்காகத்தான் காத்திருக்கார் சார், வாங்க சார்.” மூவரும் முதல் மாடியில் உள்ள இரண்டாவது அறைக்குள் வந்தார்கள். ரமணன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“ஐ அம் ரமணன். கம்பெனி எக்ஸிகியூட்டிவ். நீங்க இன்ஸ்பெக்டரா?”

“உட்காருங்க மிஸ்டர் ரமணன். உட்காருங்க. தம்பி நீயும் உட்காருப்பா”

“இனிமேல் எது நடந்தாலும் என்கிட்ட சொல்லுங்க சார். டெப்டி கமிஷனரை கஷ்டப்படுத்த வேண்டாம். என்னை கஷ்டப்படுத்துங்க. இனிமேல் உங்க ஏரியாவோட செக்யூரிட்டிக்கு நான் பொறுப்பு. இந்தாப்பா மூணு கப் காப்பி வாங்கி வா.”

ரமணனும், இளங்கோவும் அந்த இன்ஸ்பெக்டரையே பார்த்தார்கள். அவருக்கு நாற்பது வயதுக்கு சற்று மேலேயோ, கிழேயோ இருக்கும். சற்று கனமான உடம்பு என்றாலும் காற்றில்கூட பறக்கமுடியும் என்பது மாதிரியான லாவகம். இழுத்துப்பிடித்தது போன்ற தொய்வில்லாத முகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/71&oldid=636823" இலிருந்து மீள்விக்கப்பட்டது