பக்கம்:தாழம்பூ.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தாழம்பூ

இன்ஸ்பெக்டரை விரட்டுவதற்கென்றே வந்த ரமணன், அவரது தோற்றத்தைப் பார்த்ததும் கட்சி மாறிவிட்டார். தோல் பைக்குள் வைத்திருந்த ஒரு கற்றைக் காகிதத்தை அவரிடம் நீட்டிவிட்டு, ஒவ்வொரு பேப்பருக்கும் விளக்கம் சொல்வதற்காக அவர் மனத்திற்குள் ஒத்திகை போட்டார். இதற்குள் இன்ஸ்பெக்டர் முந்திக் கொண்டு பேசினார்:

“நீங்க சொல்ல வேண்டியதே இல்ல சார்! நேற்று நைட் முழுவதும் இதே வேலைதான்.மூணாவது கிராஸ் தெரு முனையில் ஒரு ஒலைவீட்டுல இருக்கிற ருக்குமணி என்கிற பால்காரியோட ஆறுவயகப் பையனைக் காணவில்லை. அதே கிராஸ் தெருவில எட்டாம் நம்பர்ல அழகிரி சாமியோட டி.வி. செட் போயிட்டுது, இரண்டாவது கிராஸ்ஸ் சம்புலிங்கம் வீட்டுல சம்புல போட்டிருந்த பூட்டும் கைப்பம்பும் போயிடுத்து. இதுங்கதான் உங்களுக்குத் தெரியும். இன்னொன்றை நான் சொல்றேன், கேளுங்க, ருேத்து இரவு நைட்ல, மெயின் ரோட்டுல இருக்கிற நியாயவிலைக் கடைய உடைச்சி ஏழுெட்டு மூட்டைகளை எத்திக்கிட்டுப் போயிட்டாங்க. அந்த ஏரியாவில இருக்கிறவங்க மனுஷங்களா? மாடுங்களா? மக்களோட ஒத்துழைப்பு இல்லாம குற்றங்களைக் கண்டுபிடிக்க முடியாது வார்.”

“அப்படியும் சொல்ல முடியாதுங்களே. இந்தப் பையன் இளங்கோ, என்னை மாதிரியே ஒரு சமூகத் தொண்டன். நேற்று உங்க ஆட்கள்கிட்ட்யே இவன் பட்டபாடு. ஒரே பாடு. இதைப் பார்த்த பிறகு எவன் போலீசிற்கு ஒத்துழைப்புக் கொடுப்பான்? இவ்வளவுக்கும் அந்தப் பொண்ணு ஒரு குழந்தைய திருடினவள்.”

“நடந்ததை மறந்துடுங்க... இனிமேல் நடக்கப் போறதை கவனிப்போம். இந்தாப்பா அவள் பேரு என்ன சரோசாவா? கூட்டிக்கிட்டு வா, க்விக். என்ன சார் செய்யறது? எல்லாப் போலீகம்,விவிஐபி பாதுகாப்புக்குப்போகவேண்டியதிருக்கு.பஞ்ச பாண்டவர் மாதிரி, ஐந்து கான்ஸ்டபிள்களை வைச்சிக்கிட்டு, இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/72&oldid=636824" இலிருந்து மீள்விக்கப்பட்டது