பக்கம்:தாழம்பூ.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தாழம்பூ

சரோசா, இளங்கோவை காலில் விழுந்து கும்பிடப்போனாள். அவன் சற்றுத்தள்ளி நின்றதும், கீழே குனிந்தாள்.நிமிர்ந்தாள்.அலை அவையாய் கண்ணிர்விட்டு அதை அழுகின்ற வாய்க்குள்ளேயே உள்வாங்கியபடி, அவள் ஓலமிட்டாள் :

“சாரே. சாரே. இளங்கோ சாரே! நான் செய்தது அல்லாம் தப்புத்தான். என்னை மன்னிச்சிடு சாரே. நீ சொன்னாத்தான் என்னை விடுவாங்களாம்.”

இன்ஸ்பெக்டருக்குக் கோபம் வந்துவிட்டது. “அதுக்குள்ள இத எவன்டி உனக்குச் சொல்லிக்கொடுத்தது? மொதல்ல அந்தக் குழந்தையை எங்கே வைத்திருக்கேன்னு இப்போ எனக்குத் தெரிஞ்சாகணும்.முன்னால சாராயம் காய்ச்சினே,சரின்னு விட்டுட்டோம். அங்கேயும் இங்கேயும் சிலரை அடிச்சே. கண்ணை மூடிக்கிட்டோம். இப்பஎன்னடான்னா,குழந்தையைதிருடினதையும் கண்டுக்காம இருப்போமுன்னு நினைச்சால் நீதான் ஒரு குழுந்தை சொல்லுடி, ரமணன் வாய்விட்டார்க் கொழுந்தையை எங்க வைச்சிருக்கே?”

‘இன்ஸ்பெக்டர் சார், டி.வி.செட், பிரிஜ்-ஜப் பத்தியும் கேளுங்க சார்”

“கொஞ்சம் கம்மா இருங்க மிஸ்டர் ரமணன்; முதலில் உயிர்ப்பிரச்சினை, அப்புறந்தான் ஜடப்பிரச்சினை. சொல்லுடி. குழந்தையை எங்கே கொண்டு போய் வைச்சிருக்கே?”

“அய்யோ சாரே! நான் அப்படிப்பட்டவள் இல்லீங்க சாரே. நெசமா சாரே, சத்தியமா சாரே”

‘இன்னிக்கிக் காலையிலே சப்-இன்ஸ்பெக்டர் கிட்ட குழந்தையை திருடி ஏதோ ஒரு கிராமத்துல வைச்சிருக்கிறதாய் சொல்லியிருக்கே.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/74&oldid=636826" இலிருந்து மீள்விக்கப்பட்டது