பக்கம்:தாழம்பூ.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 6?

“சொன்னது நிசந்தான் சாரே! அடி பொறுக்க முடியாம அப்படிச் சொன்னேன் சாரே... மொகத்துல விழுந்த குத்துகள தடுக்கிறதுக்கு அப்படிப் பொய் சொன்னேன் சாரே. நான் பொறுக்கிதான்; இல்லங்கல. ஆனால் கொழுந்தையை திருடுகிற அளவுக்கு நான் மோசமானவள் இல்ல சாரே! சத்தியமாச் சொல்றேன் சாரே. பெரிய பெரிய திருட்டெல்லாம் செய்யறவள் இல்லே சாரே!”

“அப்போ. குழுந்தைய கொன்னுட்டே. அப்படித்தானே?”

‘நானே தாயில்லாமல் வளர்ந்தவள் சாரே... ஒரு குழந்தையோடகஷ்டம் நஷ்டம் தெரிஞ்சவள் சாரே.நான் அப்படிச் செய்யறவ இல்ல சாரே!”

“சரி, உன்ன விசாரிக்கிற விதமா விசாரித்தாத்தான் சொல்லுவே. ஆனால் ஒண்ணு, இந்தத் தடவை நீ தப்பிக்கவே முடியாது. சாராயத்துக்கு ஒரு வருஷம்; எல்லாத்துக்கும் மேல குழந்தையை கடத்தினதுக்கு அல்லது கொன்னதுக்கு ஆயுள் தண்டனைன்னு உனக்கு வாங்கிக் கொடுக்கிறோமா இல்லையான்னு பாரு! அவள இழுத்துக்கிட்டுப் போய்யா.”

சரோசா, இப்போது இளங்கோவை விட்டுவிட்டு முகத்தை உப்ப வைத்துக் கொண்டு காலாட்டியபடியே அலட்சியமாக இருந்த ரமணனைப் பார்த்துக் கும்பிட்டாள். பெருமூச்சு, நெடுமூச்சாய் விட்டு அழுகின்ற வாயை அப்படியே விட்டுவிட்டு, மீண்டும் இளங்கோவைப் பார்த்தாள். தட்டுத்தடுமாறி கைகளை தலைக்குமேல் கொண்டு போய் அரற்றினாள் :

“சாரே. சாரே! இரும்பு வலையை பிய்ச்சது தப்புத்தான், ஒன்னோட ஆத்தாவ அடிச்சதும் தப்புத்தான். உன்னை டபாய்ச்சதும் தப்புத்தான். ஆனால் அத்தனையும் தாத்தாவுக்கு ஒரு பன்னுக்காகவும், ஒரு டீக்காகவும் தான். எனக்குத் தேங்காய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/75&oldid=636827" இலிருந்து மீள்விக்கப்பட்டது