பக்கம்:தாழம்பூ.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 63

ஒரு முதியவர் - சரோசா ஊட்டி விட்டாளே அந்த மெல்லிய மனிதர் - மூன்று லுங்கிக்காரர்களுக்கு மத்தியில் இருவர்மேல் தோள் போட்டு, ஒருவன் மார்பில் முதுகைப் போட்டு அங்குலம் அங்குலமாய் அந்த காவல் நிலைய வளாகத்திற்குள் வந்து கொண்டிருந்தார். அவரது பொட்டைக் கண்களில் நீர் கசிந்தது. கூடவே ஈக்களும் மொய்த்தன. அடிக்கடி அந்த ஈக்களை கையாட்டி விரட்டும் அந்த மனிதர் இப்போது அந்த சொரணையே இல்லாமல் “சரோ. சரோ.” என்று முனகிக் கொண்டே நத்தை மாதிரி நகர்ந்து கொண்டிருந்தார்.

இளங்கோவிற்கு, கண்கள் அக்கினிக்கட்டிகளாய்ச் சுட்டன. நாடி நரம்புகள் தெறித்தன. உடம்புரத்தம் முழுவதும் வேர்வையாய் வெளியே வந்து கொண்டிருப்பதுபோல் இருந்தது. ரமணன், காரை நகர்த்தப் போனபோது, அவர் அருகே போனான். மெள்ளக் கேட்டான் :

‘இதோட விட்டுடலாம்னு நினைக்கிறேன் அங்கிள். அவளைப் பார்க்கப் பாவமா இருக்கு - ஒழிஞ்சு போறாள். அவள விட்டுடச் சொல்லலாம்.”

“என்னப்பா. இளங்கோ உனக்கென்ன பைத்தியமா? அப்புறம் நாம் என்ன சொன்னாலும் போலீஸ் கேப்பாங்களா? - என்னோட பிரிஸ்டீஜ் என்னாகிறது? அதோட நீ அவளை கற்பழிக்க முயற்சி செய்துட்டு அது வெளியில தெரியக் கூடாதுன்னு புகாரை வாபஸ் வாங்குறேன்னுபோலீஸ் பிளேட்ட திருப்பினால், என்ன செய்வே.? ஒகே. ஒகே. டி.வி.யில போய் ஒலியும் ஒளியும் பாரு, மனக சரியாயிடும்.”

இளங்கோ பிரமை பிடித்து நின்றான். ரமணன் சொல்வதும் ஒரு வகையில் நியாயமாகப்பட்டது. அதே சமயம் அவளை அருத் நிலையில் காண்பதும் அநியாயமாகப் பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/77&oldid=636829" இலிருந்து மீள்விக்கப்பட்டது