பக்கம்:தாழம்பூ.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

இப்படிச் சொல்வதால் ஜனரஞ்சகப் படைப்பெல்லாம் இலக்கியத்தரமானது என்று சொல்வதாக, கோணல்வாதம் செய்யக் கூடாது. ஜனரஞ்சக படைப்புக்களிலும் பல படைப்புகளுக்கு இலக்கியத்தரம் இருப்பதில்லை. இலக்கியத்தரம் என்பது, பல அம்சங்களை ஒருங்கிணைப்பதைப் பொறுத்ததாகும்.

ஜனரஞ்சகமாக எழுதுவதாலேயே, ஒரு எழுத்தாளனை ஒரம் கட்டப்பார்ப்பது இலக்கிய தர்மம் அல்ல என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது.

சரோசா, ஒரு குப்பத்துக்காரி. திருடுதல், சாராயம் காய்ச்சுதல், அவளுக்குத் தொழில். பெற்றோரை இழந்த அவளுக்கு ஆறுதல், அவள் பாட்டன். அவரைக் காப்பாற்றும் பொறுப்பு அவளுக்கு. இளங்கோ என்ற இளைஞன் வீட்டில் திருடி மாட்டிக்கொள்கிறாள். காவல் துறையில், இளங்கோவின் நண்பருக்கு இருக்கும் செல்வாக்கால், காவல் நிலையத்தில் உதைபடுகிறாள் சரோசா. செய்த குற்றத்துடன் செய்யாத குற்றமும் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. செய்யாத குற்றத்திற்குச் சரோசா, தண்டிக்கப்படுவதை விரும்பாத இளங்கோ, தன் காதலி பாமா, பூக்காரி ருக்குமணி ஆகியோர் உதவியுடன், சரோசாவைக் காவல் நிலையத்தில் இருந்து சிறை மீட்கிறான்.

ஆனால் இந்தப் பின்னணியை உணராத சரோசா, தன் குப்பத்து ஆட்கள் மூலம், இளங்கோவைப் பழி வாங்குகிறாள். குப்பத்து ரவுடிகள் இளங்கோவை அடித்துக்குற்றுயிராய்த்துக்கி எறிகிறார்கள். பூக்காரி ருக்குமணி காப்பாற்றுகிறாள். பின்னர் சரோசா உண்மையை அறிகிறாள்.

சாராயத் தொழிலில் இருந்து சரோசாவை விலக வைத்து இளங்கோ, தன் அலுவலகத்திலேயே ஒரு தாற்காலிக வேலை வாங்கித் தருகிறான். தங்களை விட்டுப் போவதை விரும்பாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/8&oldid=636832" இலிருந்து மீள்விக்கப்பட்டது