பக்கம்:தாழம்பூ.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தாழம்பூ

“நானே இப்படி நடந்துக்கிட்டது எனக்கு ஆச்சரியமாய் இருக்குது சார். பாவம், நான் கொடுக்கிற பணத்திலேயே வீட்டோட மத்தியான ஸ்டவ்வ எரிய வைக்க நினைச்சிருப்பார் அந்த ஆட்டோ டிரைவர் என்னைப் பற்றி நினைக்கவே எனக்கு வெட்கமாய் இருக்குது. ஆனாலும் நீங்க நினைக்கிறது மாதிரி நான் பிராடு இல்லை சார். எவ்வளவு அவமானமா பீல் பண்ணுறேன் தெரியுமா?

“நான் விளக்கம் சொல்றேன் கேள். நேற்று உன் தலையிலே ஏற்றப்பட்ட சுமையிலே, உனக்கு ஆட்டோக்காரன் பாரம் தெரியல. இப்படித்தான் அந்த சரோசாவும்; அவளுக்கு இருக்கிற பிரச்சினையிலே அவள் மற்றவங்களுக்குக் கொடுக்கிற பிரச்சினைகளை நினைத்துப் பார்க்கல. அவளை மாதிரி ஆட்களுக்கு திரும்பிப் பார்க்க கடந்த காலம் இல்ல. ஏறிட்டுப் பார்க்க எதிர்காலம் இல்ல. நிற்பதற்கு நிகழ்காலமும் இல்ல. முக்காலமும் இல்லாத அஞ்ஞானிப் பொண்ணு. எப்படி கோழியை அடித்துச் சாப்பிடுவதை நாம் இயல்பாய் நினைக்கிறோமோ, அப்படி அவளும், திருடுறதை, தப்பாய் நினைக்கல. அது தப்பு என்கிற உணர்வே இல்லாதவள். இவள மாதிரி ஆட்களுக்கு மனசுன்னு எதுவும் கிடையாது. அது, பிறந்தபோதே வயிற்றுக்குள் போயிடும். இவளோட நிலைமைய யோசிச்சுப் பார். ஆட்டோக்காரனுக்குப் பணம் கொடுக்கிற நினைப்பில்லாத உன் பின்னணியிலே அவளுக்காகவும் யோசிச்கப்பார்; நமக்காவது யோசிக்க நேரமிருக்கு அவளுக்கு அதுக்கு நேரமும் இல்ல, வேளையும் வரல. அவளை மாதிரி ஆளுங்க யோசிக்க ஆரம்பிச்சா, அப்புறம் நாம் இந்த சமுதாய அமைப்பைப் பற்றி பயப்பிராந்தியோட யோசிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.”

இளங்கோ, யோசிப்பது போல் முகத்தைத் துக்கினான். அவன் முன்னால் சரோசாவின் உப்பிப்போன முகம் உரசியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/80&oldid=636833" இலிருந்து மீள்விக்கப்பட்டது