பக்கம்:தாழம்பூ.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 7.

இப்போது இந்த தமிழ்த்தாய் நகர், சென்னை பெருநகர் சீமாட்டிக்கு மையிட்ட கண்ணாய் விளங்குகிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாலும், கெஜடட் ஆபீஸர்களாலும், பாரின் ரிட்டன்களாலும் பளபளக்கிறது. ஆனால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பகுதி, நகைநட்டுப் போடாத ஒரு நாட்டுப்புறப் பெண்ணாகவே இருந்தது. அப்போது பிழைக்கத் தெரிந்த ஒரு பெட்டிக் கடை மலையாளி, ரெவின்யூ இன்ஸ்பெக்டரை மாமூலாக்கி, இருபது கிரெளண்ட் புறம்போக்கு இடத்தை பிளாட் போட்டார். மற்றவர்களையும் அப்படிப் போட வைத்தார். பிளாட்போட இடம் கிடைக்காத ஒரு ஆசாமி கொடுத்த மனுவின் அடிப்படையில், அரசாங்கம், இந்த பிளாட்டுகளை முடக்கப் போனது. ஆனால், பிளாட்காரர்களோ, அந்த பிளாட்டுகளை, எந்த அதிகாரிகளை மடக்கிப் போட வேண்டுமோ, அவர்களுக்கே பாதியை, மலிவு விலை மது விலையில் கொடுத்துவிட்டார்கள். இதனால், பொது மக்களைத் தவிர எல்லோருக்கும் லாபம். மடக்கிப் போட்டவர்களுக்கு கிரெளண்டுக்கு மூன்று லட்சம் என்றால், முடக்கப் போனவர்களுக்கும் மூன்று. லட்சம். ஆகையால் இந்தப் பகுதியை ‘வேலியே பயிரை மேய்ந்த நகர் என்று சொல்லலாம். இங்கே துவக்கத்தில் குடியிருக்க வந்தவர்கள், அடிப்படை வசதிகளை அரசிடம் கேட்பதற்காக, ஒரு சங்கத்தை வைத்தார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு வேலைப்பளு. அதிகமாக இருந்ததால், வேலை வெட்டி இல்லாத மிஸ்டர்ரமணன், தன்னைத் தானே தலைவராகப் பிரகடனப் படுத்த முடிந்ததது. அடிப்படை வசதிகள் கிடைத்ததும், ரமணனும், அந்தச் சங்கத்தின் லெட்டர்பேடுமே மிஞ்சின. ரமணன் மட்டுமே சந்தா கட்டுகிறார்.

ஆனால், இன்றைக்குப் பார்த்து ரமணனுக்கு மெளக வந்துவிட்டது. ‘திடீர் நகர் மாதிரி, அவரும் திடீர் பிரமுகர் ஆகிவிட்டார். காவல் நிலையத்தில் சரோசாவுக்கு அடிவாங்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/85&oldid=636838" இலிருந்து மீள்விக்கப்பட்டது