பக்கம்:தாழம்பூ.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 75

“போங்கம்மா. ஆட்டோக்காரனுக்குப் பயந்து அஞ்சு ரூபாய் அதிகமா கொடுப்பீங்க, ஆனால் பூக்காரிக்கிட்ட போய், அஞ்சு பைசாவுக்கு பேரம் பேசுவீங்க.”

ருக்குமணி, அந்தக் கூட்டத்தைப் பார்த்துவிட்டு, ஒரு பாவாடை, தாவணியிடம் விளக்கம் கேட்டாள். அவள் சொன்னதை உள் வாங்கிக் கொண்டு, அந்தக் கூட்டத்தை வாக்காளர்களாக நினைத்து, வாதிட்டாள் :

“ஏன் சாரே...தெரியாமத்தான்கேக்கேன்.என் கொழந்த, நான் பெத்த ஒரே கஸ்மாலம் காணாமப் பூட்டான்னு சொன்னேன். காது கொடுத்துக் கேட்டீங்களா? நானும் இந்த ஏரியாக்காரிதானே? என் பிள்ளாண்டானுக்கு இப்படி ஒரு கூட்டம் போட்டீங்களா? ஏதோ பிசாத்து இரும்பும், பன்னாட கம்பியும், என் கொயந்தைய விட உங்களுக்குப் பெரிசாப் போச்சா? அதோ, பெரிசா பேகறாங்களே பாக்கியம் அம்மா, அவங்ககிட்டே கொயந்தய காணலேன்னு அழுதேன்.என் வீட்டில ஒப்பாரிவைக்காதேன்னாங்க.அதோ தலவரு, ரமணன் சாரு, அவர்கிட்டே பஸ் ஸ்டாண்டுலே வச்சு சொன்னேன். அவர் என்னடான்னா. பஸ் வருது, அப்புறம் பேசிக்கலாமுன்னார். இப்படி நாறிப்போன உங்க ஏரியாவை இன்னும் பூவாலேயே மணக்க வைக்கேன்.”

விஜிலென்ஸ் ஆபீசர், ரமணனின் காதைக் கடித்தார். அவளை வைத்து, போலீஸ் கமிஷனருக்கு ஒரு கடிதம் எழுதச் செய்ய வேண்டும் என்றார். சரோசா தன் வீட்டிற்கு அடிக்கடி வருபவள் என்றும், அவள்தான், குழந்தையை கடத்தியிருக்க வேண்டும் என்றும் எழுதி, கையெழுத்துப் போடச்சொல்ல வேண்டும் என்றார். இந்த விஜிலென்ஸ் ஆபீஸர், சங்கத்தின் தலைமைப் பதவி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்பதற்காக, ரமணன் எழுந்தார். ருக்குமணியை நெருங்கினார். அவள் கோபத்தோடு நின்றபோது, அவள் கையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/89&oldid=636842" இலிருந்து மீள்விக்கப்பட்டது