பக்கம்:தாழம்பூ.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 79

வாங்குவது பற்றிக் கவலைப்படாமல் முன்னால் போன ருக்குமணியையும், பின்னால் பாய்ந்த இளங்கோவையும், கள்ளத்தனமாய் பார்த்தார்கள்.

இளங்கோவால், ருக்குமணியை அந்த சாலையின் முனையில்தான் பிடிக்க முடிந்தது.

அவள், இன்னொரு தெருவுக்குள் திரும்பும் வரைக்கும், அவள் பின்னாலேயேநடந்தான்.பிறகு அம்புபோல் கூர்மைப்பட்ட இரண்டு தெருக்களின் முனையில் அவள் நின்றபோது, அவள் முன்னால் போய் நின்றான். ருக்குமணி, அவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள். பப்பாளிப் பழத்திற்கு கருப்பு வர்ணம் பூசியது போன்ற முகம். வேல் போல் கூர்மையான விரல்கள். சிரிக்கப் போகிறேன் பார் என்பது மாதிரியான குவிந்த உதடுகள்.அவனைப்பார்த்ததும்மாராப்பை, சரி செய்தபடியே, அறியாத பிள்ளையாண்டானிடம்பேசவிரும்பாதவள் போல், அதே சமயம் அவன் பேசினால் பேசித் தொலைக்கத் தயாராக இருப்பது போல் நின்றாள். இளங்கோ கேட்டான் :

“ஒன்னோட. மன்னிக்கணும், உங்களோட இந்தப் பையன் காணாமல் போனவனா. இல்ல.”

“அப்போ நீ அந்த கஸ்மாலம் சாருக்கு, தூதா வந்திருக்கே, இல்லியா? வழிய விடுய்யா.”

“எந்த கஸ்மாலம்?”

“அந்தத் தெருவிலே எல்லாமே கஸ்மாலம்தான். ஆனால்

அந்த ரமணன் சாரு இருக்காரே, அவரு கஸ்மாலத்துலேயும் படே கஸ்மாலம். அந்தக் கதையே வாணாம்.”

“எந்த கதைய?”

“உயிரோட இருக்கிற என் ராமுப் பயல கொஞ்ச நாளைக்கி மறைச்கவச்சி, காணாமப் போனதா பழையபடியும் போலீஸ்வ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/93&oldid=636847" இலிருந்து மீள்விக்கப்பட்டது