பக்கம்:தாழம்பூ.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 81

என்கிறவளை போலீஸ் பிடிச்சு வைச்சிருக்குது. இப்போ நீயும், நானுமா டெப்டி கமிஷனரைப் பார்த்து நிசத்த சொல்லணும்.”

“இந்த போலீஸ் கதயே வேணாம். கோர்ட்ல வேணுமுன்னா சாட்சிக்கு வாரேன்.”

“அப்படிச் சொல்லப்படாதும்மா. உயிரோட இருக்கிற ஒன் கொழுந்தய கொன்னதா சொல்லி, சரோசாவுக்குத் துாக்குத் தண்டனை கிடைத்தால் அந்தப் பழி ஒனக்கில்லயா? ஒருத்தி செய்யாத தப்புக்கு அவஸ்த படனுமா? இந்த அநியாயத்த நாம ரெண்டு பேரும் டெப்டி கமிஷனருக்கிட்ட சொல்ல வேண்டாமா?

“டெபதின்னா அது யாரு?” “பெரிய போலீஸ் அதிகாரி” “போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை விடவா?”

“மேலே மேலே.”

“இன்ஸ்பெக்டரை விடவா?” “இன்ஸ்பெக்டருக்கும் மேலே ஏ.சி. அதுக்கு மேலே. டி.சி.” “அம்மாடியோ! அவர கண்ணால பார்க்க முடியுமா?”

“நிச்சயமா.” பூக்கார ருக்குமணிக்கு, இதயம் குதிபோட்டது. சுற்றுப்புறச் சூழலில் கான்ஸ்டபிளை ஜமீன்தாராகவும், சப்-இன்ஸ்பெக்டரை ராசாவாகவும், இன்ஸ்பெக்டரை ராசாதி ராசாவாகவும் நினைத்துப் பழக்கப்பட்டவளான ருக்குமணி, அவர்களுக்கு மேலே மாரியாத்தா ஒருத்திதான் இருக்க முடியும் என்று நம்பினாள். அவர்களுக்கும் மேலேயும் ஓர் ஆசாமி இருந்தால், அவரைப் பார்த்துத்தான் ஆக வேண்டும் என்பது போல புடவை துாசியைத் தட்டிவிட்டாள். அதே சமயம் ஒருத்தி செய்யாத குற்றத்துக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/95&oldid=636849" இலிருந்து மீள்விக்கப்பட்டது