பக்கம்:தாழம்பூ.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 83

பாமா உடனடியாக ஒரு முடிவுக்கு வந்து, அந்த முடிவுக்கேற்ற தோரணையோடு, பேசினாள் :

“சரி! ஆட்டோவ கூப்பிடுங்க”

சென்னைப் பெருநகர் காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திற்குள், அந்த ஆட்டோ ரிக்ஷா பயபக்தியுடன் நின்றது. புலி போன்ற உறுமல் சத்தத்தை நிறுத்தி விட்டு, அது பூனை மாதிரி நின்ற போதும், ஒரு வெள்ளை யூனிபார போலீஸ்காரர், அங்கே ஓடிவந்து டிரைவரை செல்லமாகத் திட்டினார் :

“ஏம்பா, நீ, பெரிய ஆட்களை கூட்டிட்டு வந்ததாகவே இருக்கட்டும். அதுக்காக எங்க கண்ணு முன்னாலேயே நாலு பேர ஏத்திட்டு வரணுமா? கேட்டுல ஒருத்தர இறங்கி வரச் சொல்லக்கூடாதா? போலீசுன்னா அவ்வளவு கிள்ளுக்கீரையாப் போச்சா?”

பாமாவும் இளங்கோவும் டிரைவர் பதில் சொல்லட்டும் என்பது போலவும், அந்த கான்ஸ்டபிளிடம் பேசுவது தகுதிக் குறைவு என்பது போலவும் நினைப்பதாய், வெள்ளைச் சட்டைக்காரர் நினைத்துக் கொண்டார். ஆனால், ருக்குமணியை ஒரு ஓரத்தில் தள்ளிவிட்டு, இடுப்பில் இடுப்பு உரச தோளில் தோள் மோத, ஜோடி சேர்ந்து அமர்ந்திருந்த அவர்களுக்கு ஆட்டோ அங்கே நின்றதே நினைவில்லை. ருக்குமணிதான், தனது பையனைப் பிடித்துக் கொண்டே, கீழே குதித்தாள். பூ மாலைகள் வைக்கப்படும் மேசையையும், பூக் கூடைகளையும், லத்தியால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/97&oldid=636851" இலிருந்து மீள்விக்கப்பட்டது