பக்கம்:தாழம்பூ.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தாழம்பூ

தட்டி கீழே இழுத்துப் போடுவது இந்த வெள்ளைச் சட்டைக்காரர்கள் தானே. ஆகையால் அவள் பயந்து போனாள். அவளைப் போலவே அந்த டிரைவரும் தலையைச் சொறிந்து கொண்டே அந்த போலீஸ் மனிதர் முன்னால் பல்லைக் காட்டினார். பாமாவும், இளங்கோவும் போட்டி போட்டுக் கொடுத்த ஆட்டோ கட்டண ரூபாய் நோட்டுகளை வாங்காமல், ஆட்டோவிள நம்பர் பிளேட்டை லாவகமாக டிரைவர் மறைத்து நின்றார். போலீஸ்காரர் தன்னுடைய பரிபாலனத்துக்கு எதிர்ப்பு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு போய்விட்டார்.

சென்னை நகருக்கே காவல் சக்ரவர்த்தியான அந்த வளாகம், எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருந்தது, ருக்குமணிக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘நாயே பேயே என்று கத்தாமல் ஆங்காங்கே நிற்கும் போலீஸ்காரர்களையும், போலீஸ் வேன்களையும், கராமுரா சத்தம் போடும் ஜீப்புகளையும் பயபக்தியோடு பார்த்தாள். அவளுக்கே சந்தேகம். அது போலீஸ் ஆபீசா. இல்லை சாதாரண ஏதோவொரு அலுவலகமா என்று. அங்கே நின்ற சிவில் உடைக்காரர்கள் அனைவரும் காவல் நிலையத்தில் நிற்பவர்களைப் போல் நிற்காமல் சாதாரணமாக நிற்பதைப் பார்த்ததும், இவளும் தன்னை வழக்கத்திற்கு அதிகமாக தனது தலையை நிமிர்த்திக் கொண்டும், மகன் ஆறுமுகப் பயலின் கையைப் பிடித்துக் கொண்டும், இளங்கோ-பாமா ஜோடியின் பின்னால் நடந்தாள்.

ருக்குமணி, பராக்குப் பார்த்துக் கொண்டே போன போது, பாமா, தனது தந்தையின் நண்பராகக் கருதப்படும் டெப்டி கமிஷனர் அறையை பல்வேறு அறைகளிலிருந்து பிரித்துப் பார்ப்பதுபோல் அவற்றின் பெயர்ப் பலகைகளைப் படித்தாள். அவர் பெயர் தெரியவில்லை. பிறகு அங்குமிங்குமாய் விசாரித்தாள். இரண்டு பேர் ஆளுக்கு ஒரு திசையாகக் காட்டிய போது, சிறிது திகைத்தாள். பிறகு, அவர்களை மாதிரியே அலைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/98&oldid=636852" இலிருந்து மீள்விக்கப்பட்டது