பக்கம்:தாழம்பூ.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 85

குறிப்பிட்ட அந்த டெப்டி கமிஷனரைக் கண்டுபிடித்த ஒருவர் வழியில் அகப்பட்டார். அவர் கட்டிக்காட்டிய இடத்திற்கு மரப்படிகள் வழியாக ஏறி, இதர எஞ்சிய மூவரையும் பின்னால் வரும்படி சைகை செய்தாள். முதல் மாடியில் மூன்றாவது அறை. அந்த அறையே குட்டி போட்டது போல் ஒரு சின்ன அறை. இந்த இரண்டு அறைக்கும் இடையே ஒரு கதவுத் தடுப்பு.

அந்த சின்ன அறைக்குள் அங்குமிங்குமாக டெலி போன்களை சுற்றிக் கொண்டிருப்பவர் முன்னால் பாமா போய் ஒரு வணக்கம் போட்டாள். அதற்கு அவர் டெலிபோனை ஆட்டியே பதில் வணக்கம் போட்டார். பாமா இனிமையாகக் கேட்டாள் :

“சார், டெப்டி கமிஷனர் அங்கிளை பார்க்கனும், இருக்காங்களா?”

“வெளியே போங்கள்’ என்று சொல்லப்போன அந்த நேர்முக உதவியாளர், அங்கிள் என்ற வார்த்தையைக் கேட்டதும் தாத்தாவாகக் குழைந்தார். அதே சமயம், இப்படிப் பல பேர் டூப் அடித்து, உள்ளே போய் ஏடாகூடமாய் பேசிவிட்டு, கடைசியில் டி.சி.யிடம், தான் வாங்கிக்கட்டிக் கொண்டதையும் நினைத்துக் கொண்டார். ஆகையால், இருக்கிறார் என்றோ, இல்லை என்றோ சொல்லாமல், அவளையே பார்த்தார். உடனே, பாமா ஆங்கிலத்தில் வெளுத்துக்கட்டினாள். கான்வெண்டில் படித்தவளான அவள், வெள்ளைக்காரி தோற்றதுபோல் விளாசினாள். குறிப்பிட்ட அந்த டெப்டி கமிஷனர் தனக்கு அங்கிள் என்றும், தான் வந்திருப்பது தெரிந்தால், அவரே அங்கு ஓடிவந்து விடுவார் என்பது போலவும் பேசினாள்.

எந்த அரசு அலுவலகத்திலும் நடைபெறும், மனிதச் சந்திப்பில் தமிழுக்கு மூடிக்கிடக்கும் கதவு, இங்கேயும் அவளது ஆங்கிலத்திற்கு வழி விட்டது. இன்டர்காமை எடுத்து, டி.சி.யிடம் அவள் வரவைக் குறிப்பிட்டார். பிறகு எதுவும் பேசாமல் தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/99&oldid=636853" இலிருந்து மீள்விக்கப்பட்டது