பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—9—

ஆரியர்தமை ஒப்பா ஆதித்திராவிடரைச்
சேரியில் வைத்தாரடி - சகியே சேரியில் 37

சேரிப் பறையர்என்றும் தீண்டாதார் என்றும் சொல்லும்
வீரர்தம் உற்றாரடி - சகியே வீரர்நம் உற்குரடி 38

வெஞ்சமர் வீரர்தம்மை வெல்லாமற் புறந்தள்ளப்
பஞ்சமர் என்டூரடி - சகியே பஞ்சமர் என்றாரடி 39

தஞ்சம் புகாத்தமிழர் சண்டாளர் எனில் தாழ்ந்து
கெஞ்சுவோர் பேரென்னடி? -- சகியே கெஞ்சுவோ 40

மாதர்சகிதம் தங்கள் மதத்தைத் தமிழ்மன்னர்க்குப்
போதனை செய்தாரடி -- சகியே போதனை செய்தாரடி 41

சூதற்ற மன்னர்சில்லோர் சுவர்க்கக் கதையை
நம்பித்தீதுக் கிசைந்தாரடி - சகியே தீதுக் கிசைந்தாரடி 42

உலகம் நமைப்பழிக்க உட்புகுந் தாரியர்கள்
கலகங்கள் செய்தாரடி - சகியே கலகங்கள் 43

கொலைக்கள மாக்கிவிட்டார் குளிர்நாட்டைத் தம்வாழ்வின்
நிலைக்களம் என்றரடி - சகியே நிலைக்களம் என்ருரடி 44

சாதிப் பிரிவுசெய்தார் தம்மை உயர்த்துதற்கே
நீதிகள் சொன்னாரடி - சகியே நீதிகள் சொன் 45

ஓதும் உயர்வு தாழ்வை ஆரியர் உரைத்திட்டால்
ஏதுக்கு நாம் ஏற்பதோ? -- சகியே எதுக்கு நாம் 46