பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—12—

எருமையைப் பசுச்சேர்தல் இல்லை; இதனாலிவை
ஒருசாதி இல்லையடி - சகியே ஒருசாதி இல்லையடி 67

ஒருதாழ்ந்தோன் உயர்ந்தாளை ஒப்பக் கருக்கொள்ளுங்கால்
இருசாதி மாந்தர்க்குண்டோ? - சகியே இருசாதி மாந்தர்க் 68

உழைப்பால் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர் என்றன்னோர்
பிழைப்பைக் கெடுத்தாரடி - சகியே பிழைப்பைக் கெடு 69

தொழிலின்றிச் சோறுண்ணாச் சுத்தர் அசுத்தர் என்ப
தெழிலற்ற வார்த்தையடி - சகியே எழிலற்ற வார்த்தை 70

உடல்நோய்கள் அற்றபேரை ஒழுக்கமில்லார் என்பவர்
கடலை உளுந்தென்பாரோ? - சகியேகடலை உளுந்தென் 71

தடையற்ற அன்பினரைச் சண்டாளர் என்றுசொல்லும்
கடையர்க்கு வாழ்வேதடி? - சகியே கடையர்க்கு வாழ் 72

பழிப்பவர்க்கும் உதவும் பாங்கர் பறையர் என்பார்
விழித்துத் துயில்வாரடி - சகியே விழித்துத் துயி 73

தழைக்கப் பிள்ளை பெறுவோர் தாழ்வாம்; பிள்ளைக்கையரை
அழைப்போர்கள் மேலோர்களாம் - சகியே அழைப்போர் 74

தோள்தான் பொருள்என்போர்கள் தாழ்வாம்; துரும்பெடுக்கக்
கூடாதோர் மேலென்பதாம் - சகியே கூடாதோர் மேலென்ப 75

மாடாயுழைப்பவர்கள் வறியர் இந்நாட்டுத் தொழில்
நாடாதோர் செல்வர்களோ? - சகியே நாடாதோர் 76