பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—14—

செட்டி உயர்ந்தோன் என்பான் செங்குந்தன் உயர்வென்பான்
குட்டுக்கள் எண்ணாததால் - சகியே குட்டுக்கள் எண்ணாத 87

செட்டிகோ முட்டிநாய்க்கன் சேணியன் உயர்வென்றே
கட்டுக் குலைந்தாரடி - சகியே கட்டுக் குலைந்தாரடி 88

சேர்த்துயர் வென்றிவர்கள் செப்பினும் பார்ப்பனர்க்குச்
சூத்திரர் ஆனாரடி - சகியே சூத்திரர் ஆனாரடி 89

தூற்றிட இவ்வுயர்ந்தோர் சூத்திரர் என்றுபார்ப்பான்
காற்றினில் விட்டானடி - சகியே காற்றினில் விட்டா 90

தம்மை உயர்த்தப் பார்ப்பார் சமூகப் பிரிவு செய்தார்
இம்மாயம் காணாரடி - சகியே இம்மாயம் காணாரடி 91

பொய்ம்மை வருணபேதம் போனால் புனித்த்தன்மை
நம்மில்நாம் காண்போமடி - சகியே நம்மில்நாம் காண் 92

நான்கு வருணம் என்று நவிலும் மனு நூல் விட்டும்
ஏனைந்து கொண்டாரடி - சகியே ஏனைந்து கொண் 93

நான்கு பிரிவும் பொய்ம்மை; நான்குள்ளும் பேதம் என்றால்
ஊனத்தில் உள்ளூனமாம் - சகியே ஊனத்தில் உள்ளூ 94

சதுர்வர்ணம் வேதன் பெற்றன் சாற்றும் பஞ்சமர்தம்மை
எதுபெற்றுப் போட்டதடி? - சகியே எதுபெற்றுப் போ 95

சதுர்வர்ணம் சொன்னபோது தடிதூக்கும் தமிழ்மக்கள்,
அதில் ஐந்தாம் நிறமாயினார் - சகியே அதில் ஐந்தாம் 96