பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—18—

"தேகம் சுமை நமைச் சேர்ந்ததில்லை!' என்று
செப்பிடும் தேசத்திலே - பெரும்
போகம் சுமந்துடற் பேதம்கொண்டோம்; மதி
போயிற்று நீசத்திலே. 4

என்னை அழைக்கின்ற கோயிலின் சாமி
எனக் கிழிவாய்த் தெரியும் - சாதி
தன்னை விளக்கிடுமோ இதை யோசிப்பீர்
சமூக நிலை புரியும். 5

என்னை அளித்தவர் ஓர்கடவுள் மற்றும்
ஏழையர்க் கோர் கடவுள் - எனில்
முன்னம் இரண்டையும் சேர்த்துருக்குங்கள்
முளைக்கும் பொதுக் கடவுள். 6

உயர்ந்தவர் கோயில் உயர்ந்ததென்பீர் மிகத்
தாழ்ந்தது தாழ்ந்த தென்பீர் - இவை
பெயர்ந்து விழுந்தபின் பேதமிலாததைப்
போடு வீர் அன்பீர். 7

உயர்ந்தவர் கையில் வரத்தினைச் சாமி
ஒளி மறைவில் தரத்தான் - மிகப்
பயந் திழிந்தோர்களைக் கோயில் வராவண்ணம்
பண்ணின. தோ அறியேன். 8