பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—31—

சொல்லிய சேசுவின் தொண்டர்கள் எங்கடி? தோழி - அந்தத்
தொண்டர்கள் உள்ளனர், தொண்டு பறந்தது தோழா - அந்தப்
புள்லிய பேதத்தைப் போக்கினரோ அவர்? தோழி அதைப்
போதாக் குறைக்குமுப் போகம் விளைத்தனர் தோழா - அடி
எல்லையில் பேதம் இழைத்ததுதான் எவர்? தோழி - அட
இந்த நெடுஞ்சட்டை அந்தகரே அறி தோழா - முன்பு
வல்லவர் சேசு வகுத்ததுதான் என்ன? தோழி - புவி
'மக்கள் எல்லாம் சமம்' என்று முழங்கினர் தோழா.
ஈண்டுள்ள தொண்டர்கள் என்ன செய்கின்றனர் தோழி - அவர்
ஏழைகள் தாழ்வுறச் செல்வரை வாழ்த்தினர் தோழா - அடி
வேண்டவரும் திருக் கோயில் வழக்கென்ன? தோழி - அட
மேற்குலம் தாழ்குலம் என்று பிரித்தனர் தோழா - விரல்
தீண்டப்படாதவர் என்பவர் யாரடி? தோழி - இங்குச்
சேசு மதத்தினைத் தாபித்த பேர்கள்என் தோழா - உளம்
தூண்டும் அருட்சேசு சொல்லிய தென்னடி? தோழி - அவர்
'சோதரர் யாவரும்' என்று முழங்கினர் தோழா.

***


பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல்லாம் என்ன? தோழி - இவை
பாரதநாட்டுப் பழிச்சின்னத்தின் பெயர் தோழா - இங்குக்
கொஞ்சமும் இப்பழி கொள்ளுதல் நல்லதோ? தோழி - ஒப்புக்
கொள்ளும் நிலத்தினில் கள்ளி முளைத்திடும் தோழா - இங்கு
நெஞ்சினிற் சேசுவின்தொண்டர் நினைப்பென்ன தோழி - தினம்
நேர்மையில் கோயில்வி யாபாரம் செய்வது தோழா-இந்த