பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—6—

இதந்தரும் சமநோக்கம் இல்லா நிலத்தில் நல்ல
சுதந்தரம் உண்டாகுமோ? - சகியே சுதந்தரம் 7

பதம்பெறப் பணிசெய்வோர் பகைகொண்டார் எனில் எந்த
விதம் அஃது கொள்வாரடி? - சகியே விதம் அஃது கொள் 8

சோதரபாவம் நம்மில் தோன்றா விடில்தேசத்தில்
தீதினி நீங்காதடி - சகியே தீதினி நீங்காதடி 9

பேதம் பாராட்டிவந்தோம் பிழை செய்தோம் பல்லாண்டாக
மீதம் உயிர்தானுண்டு - சகியே மீதம் உயிர்தானுண்டு 10

அற்பத் தீண்டாதார்என்னும் அவரும் பிறரும்ஓர் தாய்
கர்ப்பத்தில் வந்தோரன்றோ? - சகியே கர்ப்பத்தில் வந் 11

பொற்புடை முல்லைக்கொத்தில் புளியம்பூ பூத்ததென்றால்
சொற்படி யார் நம்புவார்? - சகியே சொற்படி யார்நம்புவார்? 12

தீண்டும் மக்களின் அன்னை தீண்டாரையும் பெற்றாளோ
ஈண்டிதை யார் நம்புவார்? - சகியே ஈண்டிதை யார் நம்பு 13

தீண்டாமை ஒப்புகின்றர் தீண்டாரிடம் உதவி
வேண்டாமல் இல்லையடி - சகியே வேண்டாமை 13

அடிமை கொடியதென்போர் அவர்சோத ரர்க்கிழைக்கும்
மிடிமையை எண்ணாரடி - சகியே மிடிமையை எண்ணாரடி 14

கொடியோர் பஞ்சமர்என்று கூடப்பிறந்தோர்க் கிவர்
சுடும்பேர் வைத்திட்டாரடி - சகியே சுடும்பேர். 16