பக்கம்:தாழ்வு மனப்பான்மை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாழ்வு மனப்பான்மை

1

நாகரிகப் பேச்சு

"அவரா? அவருக்கு ஒரே தாழ்வு மனப்பான்மை ஆச்சே? அதனால்தான் அவர் அப்படி நடந்துகொள்கிறார்" என்றான் என் நண்பன் சந்திரசேகரன்.

"அவருக்கேதடா தாழ்வு மனப்பான்மை? நான் யாரைப் பற்றிப் பேசுகிறேன் என்பது உனக்குத் தெரியுமோ இல்லையோ?" என்று நான் கேட்டேன்.

"எல்லாம் தெரியும். அந்த ஓவியரைப் பற்றித்தான் நானும் சொல்லுகிறேன். அவர் மற்ற ஓவியர்களிடம் பொறாமையும் எரிச்சலும் கொள்ளுவதற்கு அவருடைய தாழ்வு மனப்பான்மைதான் காரணம். அது எனக்கு நன்றாகத் தெரியும்" என்று மேலும் அழுத்தந் திருத்தமாகப் பதில் சொன்னான்.

"தாழ்வு மனப்பான்மை என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா?" என்று நான் கேட்டேன்.

"டேய், அதைப் பற்றி எனக்கொன்றும் தெரியாதென்று நினைத்துக்கொள்ளவேண்டாம். நீ கொஞ்சம் உளவியல் படித்தவனென்று உயர்வு மனப்பான்மை