பக்கம்:தாழ்வு மனப்பான்மை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

தாழ்வு மனப்பான்மை

குள்ளேயே அப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது" என்று அவள் வெளிப்படையாகச் சொன்னாள்.

இந்தத் தாழ்வு மனப்பான்மை என்கிற எண்ணம் எங்கெல்லாம் புகுந்துவிட்டது என்பது அப்பொழுதுதான் எனக்குத் தெளிவாகியது.

என் நண்பருக்குத் தாழ்வு மனப்பான்மை இருக்கிறதோ இல்லையோ அது நிச்சயமாகத் தெரியவில்லை; யாரும் அதை ஆராய்ந்து இதுவரையில் முடிவுகட்டவில்லை.ஆனால் அன்று எனக்கு ஒரு விஷயம் நிச்சயமாயிற்று. என் நண்பருடைய மனைவிக்கு அவருக்கு ஒரு கால் குட்டையாக இருப்பதைப் பற்றிய கவலை மனத்திலே அழுந்திக் கிடந்தது என்பது அன்று வெளியாகிவிட்டது.

தாழ்வு மனப்பான்மை அல்லது அதை விஞ்ஞான ரீதியில் வரையறுத்துச் சொல்லவேண்டுமானால் தாழ்வு மனக்கோட்டம் என்கிற இந்தப் புதிய கருத்து எவ்வளவு தூரம் நமது வீட்டிற்குள்ளும் நுழைந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டவே இந்தச் சம்பவத்தை இங்கே குறிப்பிடுகிறேன். இவ்வாறு இந்தக் கருத்துச் சரியாகவோ, தவறாகவோ நம்மைப் பல வழிகளில் தாக்குவதால் இதைப் பற்றித் தெளிவாக அறிந்துகொள்வது நல்லது. தவறானஅறிவு வீண் குழப்பத்தையும் சிக்கல்களையும் உண்டாக்கக் கூடுமல்லவா?

மேலும், வாழ்க்கையில் உண்மையாகவே தாழ்வு உணர்ச்சி ஏற்படுவதற்கான பல் சந்தர்ப்பங்கள் உண்டாகின்றன. வீட்டிலே வளருகின்ற குழந்தை, பள்ளியிலே பயிலுகின்ற சிறுவன், வாழ்க்கைப் போராட்டத்திலே ஈடுபட்ட இளைஞன், வயது முதிர்ந்த கிழவன் ஆகிய எல்லோரையும் தாழ்வுணர்ச்சி வெவ்வேறு வகையில் பீடிப்ப