பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தாவரம்-வாழ்வும் வரலாறும் லிருந்து பல குருத்துகள் தோன்றிக் கிழங்காகி, உண்மையான வட்டத்தண்டில் ஒட்டிக்கொண்டிருக்கும். பின்னர்ப் பிரிந்து தனிச் செடியாகும். குங்குமப்பூ (crocus sativus), கால்கிகம் (colchicum sp) முதலானவும் இவ் வகையைச் சேர்ந்தவையே (படம் 40-4). எளிதாகவும் விரைவாகவும் இனப் பெருக்கம் செய்வதற்குத் துஆனயாகச் சில நேர்த்தண்டுகள். நிலப்பரப்பிற்குமேல் ஓங்கி வளர்வதற்குப் பதிலாகப் பல கிளேகளை விடுகின்றன. அக் கிளேகள் செடியின் பல பாகங்களிலும் விரைந்து வளர்கின்றன; ஒவ்வொரு கணு அடியிலும் துணை வேர்களேச் செலுத்தி, வேண்டிய நீரை உறிஞ்சிக்கொள்ளும். ஏதேனும் ஒரு கணு இடைவெளியில் இச் செடிகள் வெட்டப்பட்டால், தாய்ச் செடிக்கும் மற்ற இளஞ் செடிக்கும் எவ்விதத் தீங்கும் நேராது. இவற்றுள் நுனிக்குருத்து நீண்டு வளர்ந்து பெருகும். பொடுதலே (lippia nodiflora) gp 568u rotsboom E. G. Gastria- (runner) GToörtuif. வல்லாரையில் (hydrocotyle asiatica) அடித்தண்டிலிருந்து கிளேத்த நுனிக்குருத்துச் சிறிது வளர்ந்து, அடுத்த கணுவில் வேர்களே விட்டு, இலேத் தொகுதியாக மாறிவிடும். அக் கணுவில் உள்ள கணுக்குருத்துச் சிறிது வளர்ந்து, அடுத்த கணுவில் வேர் விட்டு முன்போல மாறும். இங்ங்னம் நுனிக்குருத்து மாறிக் கணுக் குருத்தின் வளர்ச்சியால் தண்டு நீள்வதை, இணேத் தண்டு வளர்ச்சி என்பர். இத் தன்மையான வளர்ச்சி ஆகாசத் தாமரை போன்ற நீர்வாழ் தாவரங்களில் காணப்படும்போது இது குருங்கிடைத் g, sir G (offset) groot 'n 165lh. grin,553 09 ld-u'n sir (crysanthemum indicum) அடித்தண்டிலிருந்து தோன்றும் கிளேகள் நிலமட்டத் திற்குமேல் வராமலும், தண்டின் அடியில் கணுவிலன்றிக் கணு விடையிலும் வேர்விட்டு அங்கங்கே பல செடிகளாக வெளிப்பட்டு வளர்ந்து பெருகும். இதனே நிலக்கீழ்க் குருத்து (sucker) என்பர். இவ்வகைத் தாவரங்கள் சில நாட்களில் நிலம் முழுவதும் பெருகி விடும். தண்டின் மாற்றமைப்புச் சில தாவரங்களில் ஒருசில தொழிலுக் காகவே காணப்படுகின்றது. பாசிபுளோரா, கொடிமுந்திரி முதலியவற்றுள் கணுக்குருத்துப் பற்றுக்கம்பியாகவும், ஆண்டி கோனன், முடக்கற்றன் முதலியவற்றுள் (கணுக்குருத்து மாறி யமைந்த) இணர்க்காம்பின் நுனியாவது, அடிக்கிளேகளாவது பற்றுக்கம்பிகளாகவும் மாறி அமைந்துள்ளன. க ைர, ஆங்கோபா (oncoba), எலுமிச்சை முதலியவற்றுள் கணுக்குருத்து ==