பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தாவரம்-வாழ்வும் வரலாறும் 2. கிளேகளையும் இலைகளேயும் தாங்கி நிமிர்ந்து நிற்றல். 3. இலே விடுதல்; பலவாறு விரிந்த தாவரப் பகுதிகள் எல்லாம் சூரிய வெப்பம் பெறும்படி இலைகளைப் பரப்பி விரித்துத் தாங்குதல். 4. கரும்பு போன்ற வெளித் தண்டுகளிலும், கருணே போன்ற நிலத் தண்டுகளிலும் உணவைச் சேகரித்து வைப்பதற்கு உதவுதல். 5. இளந்தண்டாக இருக்கும்போது இலைகளேப் போலப் பச்சையம் பெற்று உணவாக்குதல். 6. கிளேக்குருத்து முள்ளாகி, விலங்கினம் மேய்ந்துவிடாமல் தாவரத்தைக் காத்தல் ; பற்றுக்கம்பியாக மாறி, தாவரங்கள் மேலேறிப் படரத் துணைபுரிதல் (படம் 41).