பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ தாவரங்களே மக்கள் விரும்புவதற்கு ஒரு காரணமாக உள்ளவை பூக்கள். பூவை விரும்பிவரும் மற்ற உயிர்கள் தேனி, தும்பி முதலியன. தாவர அறிஞர்கள் பூக்களே இனப்பெருக்கத் திற்காக மாறியமைந்த தண்டு என்று கொள்வர். இதழ்களைப் பூவிலேகள் எனவும், இவ்விலைகள் ஆண்கலவி மூலத்தையும் பெண் கலவி மூலத்தையும் தம்முள் அடக்கிக்கொண்டு காத்து வளர்த்து மலரச் செய்கின்றன எனவும் கூறுவர். பூவில் நான்கு வட்ட அடுக்குகள் (whorls) காணப்படு கின்றன. பூவின் புற அடுக்குப் புல்லிவட்டம் (calyx) எனப்படும். இது இருபுறமும் பசிய நிறமுள்ளதாகவும், வெளிப்புறம் பச்சை யாகவும், உட்புறம் வெளுத்தும், நீண்டும், அகன்றும் இலே போலவும் இருப்பதுண்டு. இதற்குப் புல்லி என்று பெயர். இதனேப் புறவிதழ் என்பாரும் உளர். ஐந்தாகப் பிளந்தும், ஒருசேர இணைந்து கிண்ணம்போலவும் இருக்கும். இதற்கு மேலுள்ள அடுக்கு அல்லிவட்டம் (corola) எனப்படும். இதில் பல்வேறு நிறமுள்ள கண்கவர் இதழ்கள் (petals) பல நெருக்கமாக அமைந் துள்ளன. அடுக்குமல்லிகைப் பூவில் வட்ட அடுக்காகவும் (cyclic), தாமரை, பெருந்தண் சண்பகம் முதலிய பூக்களில் திருகு அடுக் காகவும் (spiral) இதழ்கள் ஏந்தியைச் சுற்றி அமைந்துள்ளன. இதற்குமேல் உள்ளது ஆணக அடுக்கு (androecium) எனப்படும். இதில் ஒன்று முதல் பல மெல்லிய தாதிழைகள் (filament) பூக்களுக்கு ஏற்பக் குட்டையாகவும் நீண்டும் தாதுப்பைகளேத் (anthers) தாங்கிநிற்கும். அதற்கு மேல் உள்ள நான்காவது அடுக்குப் பெண்ணகம் (gymoecium) ஆகும். இதன் அடியில் ஒன்றுமுதல் பல சூல்களேக் (ovule) கொண்ட சூலகமும் (ovary), மேற்புறம் மெலிந்து நீண்ட சூல்தண்டும் (style), நுனியில் சூல் முடியும் (stigma) உள்ளன.