பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ыb 95 ஒரு பூவில் உள்ள நான்கு வட்ட அடுக்குகளிலும் ஒரே எண்ணிக்கையுள்ள பாகங்கள் இருக்குமானல், அதனேச் சமபகுதிப் பூ என்பர் (isomerous). இதில் மூன்று அகவிதழ்களும், மூன்று புறவிதழ்களும், மூன்று தாதிழைகளும், மூன்று சூலகமும் இருக்க வேண்டும். (அல்லது) அதில் புல்லி 5, அல்லி 5, ஆணகம் 5, பெண்ணகம் 5 இருக்கலாம். இதை பு: அ, ஆ, பெ, (K., C, A, G,) என்றும் குறிக்கலாம். சம பகுதிப் பூவில் மூன்றும், மூன்றின் மடங்கும் அல்லது ஐந்தும், ஐந்தின் மடங்கும் இருப்பதுண்டு. ஒருவிதையிலேத் தாவரங்களில் வட்ட அடுக்கு மூன்ருகவும் மூன்றின் மடங்காகவும் இருக்கும். இதை முப்பகுதியுள்ள பூ (trimerous) என்பர்; இருவிதையிலேத் தாவரங்களில் ஐந்தாகவும் ஐந்தின் மடங்காகவும் இருக்கும். இதை ஐந்து பகுதியுள்ள பூ ႕ရွိဳ႕ႏိုင္ငံ எனவும் கூறுவர். எல்லா வட்ட அடுக்குகளிலும் ஒ எண்ணிக்கையாவது (அல்லது) அதன் மடங்காவது இல்லா திருக்குமானல் அதைப் பல பகுதியுள்ள பூ (heteromerous) என்பர். - - & - பூக்கள் இலைக் கத்தகத்தில் தனித்தும் கொத்தாகவும் (பூவின ராகவும்) இருக்கின்றன. பூங்கொத்து, துணர், மஞ்சரி (inflorescence) எனவும் கூறப்படும். நுனி வளர் மஞ்சரி (racemose inflorescence), 516ðf 616 rror to Eb&#f (cymose inflorescence) grgor இது இரு வகையானது. கொன்றைப் பூந்துணரில் (cassia fistula) கீழ்நோக்கி வளரும் நுனியை உடையது. இதன் இவ் வியல்பை அறிதற்கு ஒரு சோதனே நடத்தினுேம். இவ்வினரின் நுனியை நேராக நிமிர்த்தி மேல்நோக்கி வளருமாறு கட்டிவைத்து, இரண்டு நாள் கழித்துப் பார்த்தால், இதன் நுனி வளர்ந்து கீழ் நோக்கி வளைந்திருந்தது. மறுபடி முயன்றும் இதே முடிவு கிடைக்கப்பெற்றது. ஆகவே, இது தொங்கி வளரும் இயல் புடையது எனப் புலயிைற்று. இதனேக் கபிலர், துரங்கினர்க் கொன்றை என்று கூறுவது மகிழ்ச்சி தருவதாகும். நுனி வளர் மஞ்சரியில் அடியிலிருந்து நுனிவரை பூக்கள் அமைந்துள்ளன. அடியில் நன்கு மலர்ந்த பூக்களும் துனியில் அரும்புகளும் (accropetal) இருக்கும். இனரை நுனியிலிருந்து நோக்கும் பொழுது அரும்புகள் மலரும் முறை குவியமாக (centripetal) இருப்பது தெரியும். நுனி வளரா மஞ்சரியின் நுனிக் குருத்து பூவாகிவிடுவதால் இது நீண்டு வளர்வதில்லை. இதில் மொட்டுகள் அடியிலும், பூக்கள் நுனியிலும் (basipetal) அமைந்திருக்கும். இணர்