பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தாவரம்-வாழ்வும் வரலாறும் குடைப் பூந்துணர் (Umbel) : கொத்துமல்லிச் செடியில் (coriandrum sativum) u, 5 geoTff @6Ôl (31 m 65T p, 6)?ififij;£gj jjgjlh. ஒரே நீளமுள்ள காம்புகளைக்கொண்ட பூக்கள் குறுகிய இணர்த் தண்டில் ஒரே இடத்தில் தோன்றும் (படம் 46-6). தலைப் பூந்துணர் (Capitulum): இப் பூந்துணர் மிகவும் சிறுத்து பட்டையாகிப் பல காம்பில்லாப் பூக்களேத் தாங்கி நிற்கும். சூரிய காந்தி (helianthus). இத் துணர், நடுவே ஆயிரக்கணக்கான சிறு பூக்களேயும் இணரைச் சுற்றி வெளி வட்டத்தில் கதிர்ச் சிறு பூக்களேயும் கொண்டுள்ளது (படம் 46-4). நுனிவளராப் பூந்துணர் (Cymose): இத் துணர்த்தண்டு நுனியில் பூவாகிவிடுவதால் மேற்கொண்டு வளர இயலாது. இளம் பூக்கள் பல பக்கங்களில் கிளேக்கும். மல்லிகைத் (jasminum) துணரில் நுனிப் பூ உதிர்ந்தும் அடிப்பக்கத்தில் இருபுறமாக இரு அரும்புகள் காணப்படும் (படம் 47). இவ்வகை இனரிலும் பல உட்பிரிவுகள் உண்டு. ஒரு பக்கத் தில்மட்டும் கிளேத்துப் பூவிட்டு வளர்கின்ற தேளுருப் பூந்துணரும் (உதாரணம், கோபுரந்தாங்கி-andrographis), ஒன்றுவிட்டு ஒரு பூ வளரும் சுருளிப் பூந்துணரும் (helicoid) இருக்கின்றன - உதா ரனம் ஹெமிலியா (hamelia). இரு பக்கத்திலும் அடுத்தடுத்துக் கிளேக்கும் இணைக்கிளைப் பூந்துணரை (dichasial cyme-ipoemia) ஐபோமியாவில் காணலாம். இவையன்றி வெட்சியில் பல கிளைப் பூந்துணரும் (poly chasial cyme) இருப்பதுண்டு. இவையன்றிச் சில தனித் துனர்களும் உள்ளன. திருகுக்கள்ளி (euphorbia antiquorum), østblom göre 13 gif (euphorbia hirta) opgeorgor @ør års år யுடைய யு.போர்பியா, பெடிலாந்தஸ் (pedilanthus) பிரிவுகளில் கிண்ணப் பூந்துனர் (cyathium) ஒன்று உண்டு. இதில் பல ஆண் பூக்களும் ஒரு பெண் பூவும் இருக்கும். ஆண் பூக்கள் ஒரே ஒரு தாதிழையால் ஆனவை. ஒரே ஒரு மூட்டுத் தாதிழையில் தென்படும். அதிலிருந்து எழும் அல்லி, புல்லி வட்ட அடுக்குகளும் பிற தாதிழைகளும் அருகிக் குறைந்து மறைந்தன என்று எண்ண இடமிருக்கின்றது. பெண் பூவிலும், அல்லி, புல்லி வட்டங்கள் இல்லை. ஆனல், பூக்காம்பிலும் ஒரு மூட்டு இருக்கும். அதுவும் சூலகத்தை ஒட்டியிருப்பதால் வெளிப்படையாகத் தோன்றது. பூக்களைச் சுற்றிக் கிண்ணம்போன்ற சதைப்பற்றுள்ள சுவர் உண்டு. அதன் விளிம்பில் ஒன்று (அல்லது) ஐந்து தேன் சுரப்பிகள் இருக்கும்.