பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தாவரம்-வாழ்வும் வரலாறும் தாதுப் பைகள் பின்புறத்தில் இணைப்புடன் ஒட்டிக்கொண்டு வெளித் தோன்றும். முன்புறத்தில் தாதுப்பைகளின் மேல் உள்ள நீண்ட பள்ளம் தென்படும் படம் 50). முன்புறம் பூவின் பகுதியைப் பார்த்துக்கொண்டு அமைந்த தாதுப் பைகளே உள் நோக்கி விரிவன (introrse) எனவும் கூறுவர். பின்புறம் பூவின் நடுவை நோக்கி நிற்கும் தாதுப் பைகளே வெளிநோக்கி விரிவன (extrorse) என்றும் கூறுவர். இவ்வியல்புகள் சில பூக்களின் தனிச் சிறப்பாக இருப்பதால் இவற்றைக் கொண்டு தாவரக் குடும்பத்தைச் சரியாக உறுதி செய்ய முடியும். தாதுப் பைகளில் தாது உண்டா காமல் இருந்தாலும், தாதுப்பைகள் நன்கு வளராமல் இருந்தாலும், தாதுப் பைகளே உண்டாகாது போனலும், இவை அனேத்தும் மலடான (sterile) தாதிழைகள் எனவும், ஆண்பாகத்தை ஆண் போலி எனவும் (staminode) கூறுவர். படம் 50. கேசரம் 1. கேசரம் . முன்புறம், 2. கேசாம் - பின்புறம், 3. தாதுப்பை, 4. இணைப்பி, 5. தாதிழை.