பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ 105 பூவின் ஆண் கலவி மூலம் தாது எனப்படும். இது ஒரு நுண்ணிய ஒற்றை உயிரணு. இதற்கு உள்ளுறை (intine), வெளி யுறை (exine) என இரு உறைகள் உள்ளன. வெளியுறை சற்று வலிய க்யூடின் (cutin) பொருளால் ஆனது. பெரும்பாலும் நுண் முட்செறிவான (spinous) தோற்றமுடையது. தாதுவின் உள்ளுறை மிக மெல்லிய செல்லுலோஸ் (cellulose) பொருளால் ஆனது. தாதுவின் புறத்தில் பலப்பல வகையான கோடுகளால் மிகவும் வேறுபட்ட சின்னங்கள் காணப்படும். தாவர இனத்திற் கேற்ப இச்சின்னங்கள் வேறுபடுகின்றன. இவற்றைக் கொண்டு தாவரக் குடும்பத்தை ஒருவாறு கண்டுபிடிக்கலாம். உதாரணமாக, தாதுவில் (உப்பங்கழிக் தாவரங்களின் தாதுவில்) எல்லாம் பொது வாகப் பட்டையான கோடுகள் காணப்படும். இது ஒரு சிறந்த இயற்கையுண்மை. பட்டைக்கோடுகள் இத் தாவரக் குடும்பங் கட்கேற்ப வேறுபட்டுத் தோன்றும். தாதுப்பை உண்டாகும்போது சற்றுப் பெரிய உயிரணுக்கள் நான்கு வரிசையாக அமைகின்றன. அவற்றில் உயிர்த்தாது அடர்ந்திருக்கும். இவை பல தடவை பகிர்ந்து ஆண் கரு மூல மாகப் போகும் உயிரணுக்கள் நடுவேயும், அவற்றைச் சுற்றி மூன்று நான்கு அடுக்காக மற்ற உயிரணுக்களும் அமையும். சுற்றி லும் ஒரிரு அடுக்காயுள்ள உயிரணுக்கள் கருமூல உயிரணுவுக்கு உணவு சுரக்கும் சாதனமாக இருந்து அவற்றைப் பாதுகாக்கும். ஒரளவுக்கு இவை கருமூல உயிரணுக்களின் அமைப்பையும் செயல் முறைகளையும் கட்டுப்படுத்தும் இயல்புடையன எனச் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். <ebször asgj epso a-ustir gros 676ù (pollen mother cell) 2-6irer உட்கரு இரண்டு தடவை பகிர்ந்து நான்காகும். முதலில் குன்றல் பகுப்பு முறையிலும், அடுத்து சாதாரணப் பகுப்பு முறையிலும் இது நான்கு உட்கருவாகப் பிரியும். இவைகள் தனித்தனி உயி ரனுச் வரைப் பெற்று நான்கு தாதுக்களாகிவிடும். தாது முளேக்கும்போது உள்ளுறை தாதுக்குழாயாகி (pollen tube), வெளியுறையில் காணப்படும் முளேத்துளே வழியாக நீண்டு வளரும். தாதுவின் உள்ளிருந்த உட்கரு இரண்டாகித் தாதுக் குழாய்க்குள் செல்லும். இவற்றுள் சற்றுச் சிறியதான பிறவி மூலக்கரு (generative nucleus) திரும்பவும் இரண்டாகப் பிரிந்து, ஆண்கரு அணுக்கள் (male gametes) ஆகின்றன. இதற் கிடையில் அங்கிருந்த மற்ருெரு பெரிய உட்கரு மறைந்துவிடும். தாதிழையின் நுனியில் தாதுப் பைகள் பூக்களுக்குத் தக்கவாறு