பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தாவரம்-வாழ்வும் வரலாறும் ஒட்டியிருக்கின்றன. பொதுவாக அடித்தொடுப்பான பைகள் (basifixed) அதிகமாக உள்ளன. புறத்தில் ஒட்டியவற்றைப் (dorsifixed) Lurrestl4G6Irirrr (passiflora) sobib ET 6ơor 6-orth. o சில சமயம் ஒரே பூவில் தாதிழைகள் இரண்டு வடிவத்தில் இருக்கும். இது இரு வடிவமான (dimorphic) கேசரம் எனப்படும். அன்றி டர்னிரா (Turnera) இனத்தில் இரு வகையான பூக்கள் உள்ளன. சில செடிகளில் உண்டாகும் பூக்களில் தாதிழைகள் நீளமாகவும், சூல் தண்டு குட்டையாகவும் இருப்பதுண்டு. ஒரு பூவின் தாதிழைகள் புல்லியுள்ளே அடங்கிய நீளமுடன் இருப்பின் அதை உள்ளடங்கு கேசரம் (inserted stamens) என்றும், புல்லியை விட்டு வெளியே கிளம்பித் தோன்றுவதை வெளிப்பட்ட கேசரம் (exserted) என்றும் சொல்வதுண்டு. பூக்களில் ஒன்று முதல் பல தாதிழைகள் இருக்கும். அல்லி பிரிந்த பூக்களில் பத்தும், பத்திற்கு மேலும், அல்லியினேந்த பூக்களில், பத்திற்குக் குறைவாயும் காணப்படும். பொதுவாக ஒருவிதையிலேத் தாவரங்களில் தாதிழைகள் மூன்றும், மூன்றின் மடங்கும், இருவிதையிலேத் தாவரங்களில் தாதிழைகள் ஐந்தும், ஐந்தின் மடங்கும் இருக் கின்றன. தாதுப் பைகள் நீட்டுவாக்கில் வெடித்துத் தாது வெளிப் படுதல் துளசியிலும், தாதுப்பையின் நுனியில் துளையுண்டாகி வெளிப்படுதல் கத்தரியிலும், சாளரக் கதவு திறந்து மூடுவது போலத் தாதுப் பையின் வெளிப்புறத்தில் வெடித்து வெளிப்படுதல் பார்பெரியிலும் (barberry) காணலாம். நெல், புல் முதலியவற்றில் தாதுப் பைகள் காற்றடிக்கும் பக்கமாகச் சாய்ந்து கொடுக்கும்படி (versatile) பொருந்தி உள்ளன. தாதிழைகள் ஒரு தொகுப்பாக (monadelphous) இருப்பதைப் பூவரசிலும், இரு தொகுப்பாக இருப்பதை (diadelphous) உளுந்து, (phaseolus mungo), Luup (phaseolus radiatus) (p:56âuusufbógih, பல தொகுப்பாக இருப்பதை ஆமணக்கிலும் (ricinus communis) காணலாம். தாதுப் பைகள் மட்டும் ஒன்ருேடொன்று ஒட்டிக் கொண்டு தாதிழைகள் தனியாக இருப்பதையும், இனேந்திருப் பதையும் (syngenesious) சூரியகாந்தி இனத்தில் காணலாம். தனியாக இருக்கும்போது, தாதிழைகள் ஊமத்தைபோல் இதழ்களின் உட்புறத்தில் ஒட்டியிருப்பதை அல்லி மேலானவை (epipetalous) என்றும், பூவுறையின் உட்புறத்தில் வெங்காயத்தில் இருப்பதுபோல் ஒட்டியிருத்தலே இலே மேலானவை (epiphyllous) என்றும் உரைப்பர்.