பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ыb Í 13 சூலகத்தின் நுனியில் நேராக எழும். ஒரு சில தாவரங்களில் சூலகத்தின் பக்கவாட்டமாக (lateral) ஒருபுறம் சாய்ந்தாற்போல் இருப்பதுமுண்டு. துளசிக் குடும்பத்தில் சூலகத்தின் அடியி லிருந்தே அதாவது, பூவடியினின்றே கிளம்பும். இதைச் சூலக மையச் சூல்தண்டு (gymobasic style) என்பர். கொட்டை வாழை, (canna indica), ஐரீஸ் (iris) முதலியவற்றில் சூல்தண்டு பட்டை யாகவும், நிறம் பெற்றும், அல்லி போன்றும் இருக்கும். சாதாரண மாகக் கருவுற்றவுடன் சூல்தண்டு வாடிவிடும்; வாடி உதிர்ந்தும் விடும். எனினும், நார்வேலியா (marvelia), கிளிமாடிஸ் (clematis) முதலிய தாவரங்களில் சூல்தண் டு உதிராமல் நிலேத்து நிற்கும். சூல்தண்டைச் சுற்றி மயிர்போன்ற அமைப்பும் உண்டு. இவை மகரந்தத்தைப் பற்றிக்கொள்ளப் பயன்படும். சூல் முடி (Stigma) : சூல்தண்டின் நுனியில் முடிச்சுப்போ லிருக்கும். சிற்சில பூக்களில் சற்றுக் கூரியதாகவும், பட்டையாக நீண்டும், பல பகுதிகளாகப் பிரிந்தும் கிளேத்தும் இருப்பதுண்டு. குல்தண்டுப் பிளவுகள் (lobes) சூல் இலேகளின் எண்ணிக்கையை Զ- 5:I) Լ- ԼLI եII . பூக்களின் அமைப்பைப் பூச் சித்திரங்கள் நன்கு விளக்கும். பூச் சித்திரம் என்பது பூவின் எல்லாப் பாகங்களேயும் குறுக்கு வெட்டு முகப்பில் அறிவதேயாகும் (படம் 53, 54). தா-8