பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகரந்தச் சேர்க்கை தாவர இயலில் மிகவும் சுவையான பகுதி பூக்களேப் பற்றியது. அதைக்காட்டிலும் சுவையானது, மகரந்தச் சேர்க்கை அல்லது தாதுச் சேர்க்கை. இவ் வறிவியலே முதன் முதலில் உணர்ந்து கூறியவர் கோல்ரிட்டர் (kolreuter) என்ற ஜெர்மானியப் பேரறிஞர். அவரையடுத்து ஸ்பிரெஞ்செல் (Sprengel), டார்வின் (Darwin), (360m (Loew), gŵdölq- Istrirsöör@ (Hildebrand), 61–6b1?369 (Delpino), முல்லர் (Muller) முதலியவர்கள் மகரந்தச் சேர்க்கையைப்பற்றி ஆராய்ந்து சொன்னவர்களில் முக்கியமானவர்கள். உண்மையில் இத் துறையில் ஆயிரக்கணக்கான வெளியீடுகளும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளியாகி உள்ளன. இவ்வுண்மைகளே ஒருங்கு திரட்டித் தாவரக் குடும்பம் குடும்பமாக மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளேயெல்லாம் வகைப்படுத்திப் பெருநூல் ஒன்று வெளியிட்ட பேரறிஞர் பால் நூத் (Paul knuth) ஆவார். இந் நூலே ஐன்ஸ்வர்த் டேவிஸ் (Ainsworth Davis) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மகரந்தச் சேர்க்கை இருவகையானது. தன் மகரந்தச் சேர்க்கை (self pollination) இருபாற்பூக்களில் நிகழும். ஒரு பூவின் தாதுக்கள் அப் பூவின் சூல் முடியைச் சேருவதைத்தான் மகரந்தச் சேர்க்கை என்பர். பிற மகரந்தச் சேர்க்கை (cross pollination), ஒருபாலான பூக்களிலும் இருபாலான பூக்களிலும் நிகழும். ஒரு பூவின் தாது அச் செடியில் உள்ள வேறு பூக்களின் குல் முடியையாவது, அவ்வினத்தைச் சார்ந்த வேறு செடிகளில் உண்டாகும் பூக்களின் சூல் முடியையாவது சேருவதைப் பிற மகரந்தச் சேர்க்கை எனலாம். இவ் விருவகை மகரந்தச் சேர்க்கை களில் பின்னர்க் கூறப்பட்ட பிற மகரந்தச் சேர்க்கைதான் தாவரங் களில் மிகுந்து காணப்படுகின்றது. இதற்கெனத் தாவரங்கள் பல சாதனங்களைக் கையாளுகின்றன. சில செடிகள், பிற