பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 116 தாவரம்-வாழ்வும் வரலாறும் சேர்க்கும் பணியைப் பூச்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. பூச்சி என்ற போது, தேனி, வண்டு, சுரும்பு, தும்பி, Dமிறு, ஈ, ©oro (bee, moth, dragonfly, beetle, fly, wasp) (p.56&u. வற்றைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். இவை பூக்களின் அழகிய நிறத்தாலும், நறுமணத்தாலும், இனிய தேலுைம் இழுக்கப்பட்டு, மலரும் பூக்களே நாடிப் போகும். விரியும் மன மவிழ்க்கும் மலர் முகிழ் மேல் எல்லாம் கரிய வரிவண்டு முத்த மிடல் காணலாம். பூக்கள் விரியு முன்னர் அழையா விருந்தாக விடியற்காலேயில் இவை முந்தி நிற்கும். கேபம்பா (cabomba) அரும்பு வண்டு வந்து அமரும் நிறையினுல் மலர்ந்து விரியும் என்பர். இப் பூக்களில் தேனுண்ன வரும் பூச்சிகட்கு ஏற்பப் புல்லி வட்டம் மாறுதல் அடைந்து இருக்கின்றது. நீண்ட துதிக்கை (probosis) உடைய பூச்சிகள் நீண்ட அல்லி வட்ட முடைய பூக்களேயும், துதிக்கை அற்றவை அல்லி விரிந்த பூக்களே யும் நாடும். ஒரு சில பூக்களே ஒரு சில வண்டுகளே விருமபி வரும். எல்லாப் பூக்களேயும் எல்லாப் பூச்சிகளும் நாடுவதில்லே. பெரும் பாலும் மணமுள்ள பூக்கள் நிறமுள்ளவைகளாக இருப்பதில்லே (கொட்டை வாழை). மனமும் நிறமும் உள்ள அழகிய பூக்களில் தேன் சுரப்பதில்லே (மல்லிகை - jasminum). பூக்களின் கவர்ச்சி யான பாகம் புல்லி வட்டமாகும். அகவிதழ்கள் மென்மையாக இருப்பதோடு பல வண்ணங்களேயுடையதாகவும் இருக்கின்றன. பூக்களின் அமைப்பும் மாறுபட்டு ஒழுங்கில்லாதனவாக இருப்பதும் வண்டுகளே அழைத்தற் பொருட்டேயாம். டார்வின் கூறுவது போல ஒழுங்கில்லாத பூக்கள் வண்டுகளால் மகரந்தச் சேர்க்கை யைப் பெறுவதில் தவறுவதில்லை. அகவிதழ் நிறமின்றி இருக்கு மால்ை, புறவிதழ் நல்ல நிறம் பெற்று இருப்பதை மியூசாண்டாவில் காணலாம். பூவடிச் செதில் (bract) விரிந்து கண்கவர் நிறம் பெற்று இருக்கும். போகென் வில்லாவிலும் (bougain willea) ub Guri ustuur 693) th (euphorbia pubcherrima) æG&wr, Gertul (colachasia) முதலிய பூவினர்களின் மெல்லிய பாளே பல திற முடையதாக இருப்பதும் இதன்பொருட்டே. தேனிக்கள், வண்டு, தும்பிகளைப்போல நிறத்தினுல் ஏமாறு பவையல்ல. தேனுள்ள பூக்களேயே இவை புெரிதும் நாடுகின்றன. ஒரு தேனி நுாற்றுக்கணக்கான பூக்களில் தேன் நுகரும். காசித் தும்பை (impatiens balsamina) முதலான பூக்களில் தேன் குழாயும் (spur), வட்டத் தட்டுப் பூவகையில் (disciflora) பலமாதிரியான தேன் சுரப்பிகளும் அமைந்திருக்கின்றன (படம் 55). இவை அல்லி வட்டத்திற்கும் புல்லி வட்டத்திற்கும் இடையில் அடிப் பாகத்திலும், புல்லி வட்டத்திற்கும் ஆண்பாகத்திற்கும் இடை