பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 தாவரம்-வாழ்வும் வரலாறும் நாடி வரும் பூச்சிகளுக்குத் தேனளிக்காமல் தாதுமட்டும் அளிக்கும் பூக்கள் பப்பாவர் (papaver) முதலியன. இப் பூச்சிகளேத் தாதுண் பறவை என்பர். கொத்துமல்லிக் குடும்பப் (umbelliferae) பூக்களில் எல்லா வகையான பூச்சிகளும் எளிதில் தேன் உண்ணும்படி நன்கு வெளிப்படையாகக் கிடைக்கும். கடுகு குடும்பத்தில் (cruciferae) நல்ல வெயில் காயும்போதும் சில சமயங்களில்தான் தேன் வெளிப்படையாகத் தோன்றும். மற்றச் சமயங்களில் தேன் மறைந்திருக்கும். தைமஸ் பூவில் (thymus) பூச்சிகளுக்குத் தெரியாதபடி தேன் முற்றிலும் மஜைக்கப் பட்டு இருப்பதுண்டு. பூக்கள் மிக அடர்ந்துள்ள இன\களே யுடைய சூரிய காந்திக் குடும்பத்தில் பூச்சிகளுக்குத் தேன் எளிதில் புலனுவதில்லே. இவ்வகைப் பூக்களைச் சிதைத்து வண்டுகள் தேன் உண்பதை, து விரிய மலர் உழக்கித் துனே யோடும் பிரியாதே பூவிரிய மது நுகரும் பொறிவரிய சிறு வண்டே என்றனர். அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த பூக்கள் எல்லாம் தேனிப் பூக்கள் என்றே கூறப்படும். டையாந்தஸ் (dianthus), Gorgoño u r (lonicera) முதலிய பூக்களில் மெல்லிய நீண்ட துதிக்கையுடைய தும்பிகள் சென்று தேனுண்ணும். இவற்றில் வேறு பூச்சிகள் தேன் எடுக்க முடியாது. ஆகவே, இவை தும்பிப் பூக்கள் (lepidopterid flowers) si gori (9h. 33563 ureo (3er eb—r (ruta), வெரோ னிகா (veronica) முதலிய பூக்களில் ஈரிறகு உடைய பூச்சிகள் தேன் நுகரும். இவை விரிப்பிற் பெருகும். பொதுவாக, இவ்வகை மகரந்தச் சேர்க்கையை உடைய தாதுக்களின் வெளியுறை பலப் பல வகையாக மிக நுண்ணிய மேடு பள்ளங்களைப் பெற்றும், பசைப் பொருளேக்கொண்டும், பூச்சிகளின் உடம்பில் ஒட்டிக் கொள்வதற்கு ஏற்ப அமைந்துள்ளன. 2. நீரின் துணைகொண்டு நிகழும் மகரந்தச் சேர்க்கை தாவரங்களில் அதிகமாக இல்லே. நீர் வாழ் தாவரங்களில் உண்டாகும் தாதுவிற்கு வெளியுறை (exine) இல்லே. தாதுச் சேர்க்கை நீருள் நிகழ்வனவற்றில் மகரந்தம் நீரையொத்த அமுக்கம் உடையதாகவும், நீருக்கு மேல் தாதுச் சேர்க்கையுடைய தாவரங்களில் மகரந்தம், நீரைக்காட்டிலும் குறைந்த அமுக்கம் உடையதாகவும் காணப்படும். surgasiog bifur (vallisneria spirals) (ut–th 56) psörsoff பாயும் வாய்க்கால்களில் நீண்ட புல்போல வளரும். ஆண் செடி யும் பெண் செடியும் தனித்தனியாக இருக்கும். ஆண் செடியின்