பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 o தாவரம்-வாழ்வும் வரலாறும் படம் 57. சூரியகாந்திப் பூவில் மகரந்தம் வெளிப்படுதல் மட்டத்தில் உலாவி வரும். பெண் செடியில் பெண் பூ உண்டாகும். பற்றுக் கம்பி போலிருக்கும் பூ, முதிருமுன் பூக்காம்பு சுருண்டு வளைந்து நீருக்கடியிலேயே இருக்கும். பருவம் வந்தவுடன் பூக் காம்பு நிமிர்ந்து, நீண்டு, நீரின் மேற்பரப்பிற்கு வந்து சேரும். ஆண் பூக்கள் காற்றில் அசைந்து அருகில் வரும்போது மகரந்தம் வெளிப்பட்டுப் பெண் பூவின் சூல்முடியைச் சேரும். (படம் 56). ஹைடுரோ காரிடே.சி (hydro charitaceae) என்ற நீர் வாழ் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தவை, இங்ங்னம் நீரின் துனே கொண்டு மகரந்தச் சேர்க்கை செய்யும். 3. காற்றின் துணைகொண்ட மகரந்தச் சேர்க் கையில் மகரந்தம் வழவழப்பாகவும் உலர்ந்தும் இருக்கும். பைனஸ் (pinus) தாதுவின் புறத்தோல் விரிந்து இருபுறமும் சிறகுபோல் இருப்பதால் எளிதில் இவை காற்றில்ை பறந்து செல்லும். இதன் பூக்கள் எவ் வித கவர்ச்சியும் பெறவில்லே. நிறமும், மனமும், தேனும் இவற்றில் காணப்படாது (நெல், புல், கரும்பு, சோளம்). சூல்முடி நீண்டு கிளேத்து மயிர்த்துாவிகள் அடர்ந்து இருக்கும். இதல்ை காற்றில் வரும் தாதுக்களே இவை பற்றிக்கொள்ள முடிகின்றது. தாதிழை களும் மிக நீண்டு, பூக்களுக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண் டிருக்கும். தாதுப் பைகள் காற்றடிக்கும் பக்கமாகத் திரும்பிக் கொண்டு தாதுவை உகுக்கும். இவற்றில் மகரந்தம் பிற சூல்