பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகரந்தச் சேர்க்கை 121 முடியைச் சேர்வதற்குள்ள வாய்ப்பு மிகவும் குறைவு. அதனல் இவ்வகை மகரந்தச் சேர்க்கையுடைய தாவரங்களில் தாதுக்கள் மிக அதிகமாக உண்டாகின்றன. சைபிரேசி (cyperaceae), கிரா மினே (gramineae) முதலிய தாவரக் குடும்பங்களிலும் விதை முடாத் தாவரங்களிலும் இம் முறை மிகுந்து காணப்படும். 4. விலங்குகளின் துணைகொண்ட மகரந்தச் சேர்க்கை : ஜாவா தீவில் வளரும் பெரிசீனி வியொ (ferycinetia) தாழைக் குடும்பத்தைச் சேர்ந்த வன்கொடி. இதில் உள்ள அகவிதழ்கள் மூன்றும் வெளிப்புறம் சிவப்பானவை. இவற்றை வெளவால் விரும்பி உண்ண வரும். அப்போது அதன் அருகில் உள்ள மகரந்தப் பைகள் சிதைந்து வெளவாலின் மேல் தாது ஒட்டிக் கொள்ளும். வேறு பூவை வெளவால் நாடும்போது இத் தாதுக்கள் பெண் பூவில் உள்ள சூல்முடியைச் சேருகின்றன. பாகினியா (bauhinia) பூவை வெளவால்கள் சுற்றித் திரிகின்றன. இதில் தேன் சுரப்பதில்லே. ஆல்ை, நல்ல மனம் உண்டு. இப் பூவை நாடி வரும் பூச்சிகளே உண்பதற்கு வெளவால் பூவின் தழைகளேப் பற்றிக்கொண்டிருக்கும். அப்போது மகரந்தம் இப் பூவின் மேல் ஒட்டிக்கொள்ளும். வேறு பூக்களே நாடிப்போகும்போது பிற மகரந்தச் சேர்க்கை வெளவால்களால் நடக்கின்றது. பறவைகள் மகரந்தச் சேர்க்கை செய்வதை பிரேசில் நாட்டில் வளரும் பீஜ்யோவா (feijoa) மரத்தில் காணலாம். இது நாவல் குடும்பத்தைச் சார்ந்தது. ஐம்பது, அறுபது தாதிழைகளைக் கொண்டது. சிவந்த தாதிழைகள் நீண்டு வலிய காம்புபோல் இருக்கும். தாது நல்ல மஞ்சள் நிறமானது. குல் காம்பு தடித்துக் கருஞ்சிவப்பாகவும், தாதிழை வட்டத்திற்குமேல் நீட்டிக் கொண்டும் இருக்கும். அல்லி வட்டம் சுருண்ட பின்னர் இதழ் களுக்கு நல்ல இனிப்பான சுவை உண்டாகின்றது. இவற்றைப் பறவை ஒன்று உணவின் பொருட்டுப் பூவின் மேல் அமர்ந்த வண்ணம் உட்கொள்ளுகின்றது. அப்பொழுது இதன் மகரந்தம் பறவையின்மேல் ஒட்டிக்கொள்வதால், வேறு பூக்களே இப் பறவை நாடும்போது பிற மகரந்தச் சேர்க்கை எளிதாக நிகழ் கின்றது. இவ்வாருகச் சில பறவைகள் மகரந்தச் சேர்க்கை செய்வதுபோல மரங்கொத்திப் பறவை ஆரஞ்சு மரத்தில் செய்யும் என்பர். கலியான முருங்கையின் செக்கச் சிவந்த பூக்கள் மலரும்போது விடியற் காலேயில் காக்கை தாது.ண்பதை நாம் காணலாம். இவைகளும் தாதுச் சேர்க்கை செய்யக்கூடும் என எண்ணுதற்கு இடமுண்டு.