பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தாவரம்-வாழ்வும் வரலாறும் சிற்சில சிறு பறவைகள் (sun Fird) கூரிய நீண்ட மூக்கை நுழைத்துத் தேன் நுகரும். சில பறவைகள் துணுவின் (morinda tinctoria) புல்லி வட்டத்தின் அடியில் வெளிப்புறம் இருந்து கொண்டே, அலகினல் துளேயிட்டுத் தேனுண்னும் எனக் கூறுவர். இவ்வகைப் பூக்கள் செங்குத்தாக மலர்வதோடு அதிகமான தேனேயும் சுரத்தல் வேண்டும். நத்தைகள் தாதுச் சேர்க்கை செய்வதைச் சில ஆசிரியர்கள் கூறுவர். லெம்னு போன்ற நீர் வாழ் தாவரங்கள் சிலவற்றில் வேறு முறையில் தாதுச்சேர்க்கை நிகழ முடியாதபோது நத்தைகள் மகரந்தத்தைக் கொண்டுசேர்க்கின்றன. நிறம் : பூச்சிகள் தா து ச் சேர்க்கையை நிகழ்த்தும்பொருட்டுப் பூக்கள் தம்மை விரும்பத்தக்க பொருள்களாக ஆக்கிக்கொள் கின்றன. அதனல், பூக்கள் கண்கவர் நிறமும், மனமும், தேனும் பெற்றுள்ளன. பூக்களின் நிறத்திற்கு ஒர் அளவேயில்லே. பூக்களில் எத்தனேயோ விதமான நிறங்கள் உள்ளன. ஒரே பூவில் பல நிலங்கள் காணப்படும். எந்தப் பூவில், எந்த இடத்தில், எந்த நிறம், எந்த அளவிற்கு, எந்த நேரம்வரை இருக்கும் என்று எண்ணி அ று தி யி ட் டு உரைப்பது ஒரு தனி அறிவியலாகிவிடும். பூக்களின் நிற்ம், வண்டுகளே அழைப்பதற்குப் படைக்கப்பட்டதாகவே தாவர நூல் கூறும். ஒரு பூவின் நிறத்தை இந் நிறந்தான் என்று திட்டவட்டமாகக் கூற இயலாது. ஒரு சில நிறங்களின் கலப்பால் பலவேறு நிறங்கள் உண்டாகின்றன. பிரேசில் நாட்டில் உள்ள ஒரு லான்டான (lantana) பூவிதழ் முதல் நாள் சிவப்பாகவும், மறுநாள் ஆரஞ்சு நிறமாகவும், மூன்ரும் நாள் கருஞ் சிவப்பு நிறமாகவும் மாறுகின்றது. நிறத்தோடுகூடச் சில பூவமைப்புகளும் பூச்சிகளேக் கவரக்கூடியனவாக இருக்கின்றன. நிறமில்லாத சிறு பூக்கள் அடர்ந்துள்ள இணர்கள் கொத்துக் கொத்தாக இருப்பதால் பூச்சிகளே எளிதில் கவர்கின்றன. கொத்து மல்லிக் குடும்பத்திலும் சூரியகாந்திக் குடும்பத்திலும் (compositae) பூக்கள் மிகச் சிறியவை; நிறமற்றவை. ஒரு பூச்சி ஒரு தடவையில் புல பூக்களில் மகரந்தச் சேர்க்கை செய்ய, இவ் வினர்கள் துணேயாக உள்ளன. சில பூக்கள் பசுமையாகவே இருப்பதால் இலேகளின் நிறத்திலிருந்து அவற்றை வேறு பிரித்துக் கான முடியாது. அவை இருப்பதை நமது கண்கள் அறிய இயலாது. இருப்பினும், பூச்சிகள் அவற்றை எளிதில் அறிந்துகொள்கின்றன. இதற்குக் காரணம் இப் பூக்களில் மிக நுட்பமான ஊதா (ultra