பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 தாவரம்-வாழ்வும் வரலாறும் (moth flowers) என்பர். இலைகளிடை மறைந்து, வேறு நிறமின்றிப் 1360) rura; 2 girar se bth (36or foño (ampelopsis quaniquefolia) பூக்களில் உள்ள மணம் நமக்குப் புலனுவதில்லே. எனினும், இப் பூக்களை நாடித் தொலைவிலிருந்து வந்து விழும் பூச்சிகளேப் பார்த்தால், இவைகட்குமட்டும் மணம் புலகுைம் போலும் என நினே க்கவேண்டியிருக்கிறது. தேன் : பூக்கள் தம்மை நாடும் பூச்சிகளுக்குத் தாதுவையும் தேனேயும் உண்ணும் பொருளாகத் தருகின்றன. பூவின் நிறத்தாலும் மணத் தாலும் ஈர்க்கப்படும் பூச்சிகள், மிகச் சிறந்த உணவாகிய தேனேயும் தாதுக்களையும் உண்டு மகிழ்ந்து, பூக்களிலேயே உறைதலும் உண்டு. பூக்களில் தனிப்பட்ட சுரப்பிகளில் தேன் விளேகின்றது. சுரப்பிகள் பல வடிவானவை. வெளிப்படையாகத் தேன் சுரக்கும் பூக்களும், சற்று மறைவாகத் தேன் பிலிற் றும் பூக்களும், தேன் இருப்பது தெரியாத பூக்களும் உள்ளன. ஒரு பூவில் உள்ள தேனே உறிஞ்சுவதற்கு ஏற்ற நீளமுள்ள துதிக்கை பெற்ற பூச்சிகளே அப் பூக்களே நாடி வருகின்றன. ஆகவே, பூக்களே, தேனிப் பூக்கள், தும்பிப் பூக்கள் என்றெல்லாம் பிரிப்பதுண்டு. தேன் உண்மையில் உயிரணுவிலிருக்கும் உயர்த் தாதுவிலிருந்து சுரந்து வெளிப் படுவது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் இயல் Ljsco Luu (35stgjafir'i Lb5?6ör (strobilanthes kunthianus) (3.356ör 163; 35 சுவையுடையது. ஆ. வேம்பு பூத்துக் காய்க்கும் நாளில் எடுக்கப் படும் தேனே, மருந்துடன் கலந்து உட்கொண்டால் நோய் எளிதில் குனமாகும் என்பர். தாது : தம்மை நாடும் பூச்சிகளுக்குத் தாதைமட்டும் உணவாக அளிக்கும் பூக்களும் உண்டு. அனிமோன் (annemone), ஹெபரி கம் (hypericum) இவற்றில் தாது வெளிப்படையாகச் சிந்தும். அன்றி, தாதிழைகளில் பல நிறமுள்ள மயிர்த் தூவிகள் அடர்ந் துள்ளன. இவை பூச்சிகளே அழைப்பதுடன் தாதுவைப் பெறுவ தற்கு வழிகாட்டிகளாகவும், தாதுவைச் சேகரிக்கும்போது கால் வைத்து ஏறிச் செல்லும் படிக்கட்டுகள் போலவும் பயன்படு கின்றன. தாதுவின் நிறமும் சில பூக்களில் மாறுவதுண்டு. ஹீரியா (heeria) பூவில் இருவகையான தாதுக்கள் உண்டாகின்றன. இதன் மேற்புறத்தில் உள்ள குட்டையான தாதிழைகள் கண்ணேப்

  • இதன் விரிவைத் தமிழ்ப் பொழில் துணர் 34 மலர் 1 1-ல் எமது கட்டுரையில்

காண்க.