பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகரந்தச் சேர்க்கை 125 பறிக்கும் பொன்வண்ணத் தாதுப் பைகளேத் தோற்றுவிக்கும். இவற்றைப் பூச்சிகள் உண்ணுதலின், இவைகள் உணவிற்குப் பயன் படும் தாதுப் பைகள் எனப்படும். இப் பூவின் அடிப்புறத்தில் உள்ள தாதிழைகள் செந்நிறமானவை. இவை பின்னர் ஊதா நிறமாக மாறும். இவற்றில் உண்டாகும் தாதுவே, கருவுடன் கலக்கும் இயல்புடையது. இவை பூச்சிகளின் மேலே படிவதற்கு ஏற்றவாறு பூவின் அமைப்பு இருக்கிறது. தன்மேல் படிந்த தாதுக்களே வேறு பூக்களில் சேர்ப்பதற்கு இங்ங்னம் பூக்கள் பலவகையான தந்திரங் களேக் கையாளுகின்றன. பிற மகரந்தச் சேர்க்கைக்கு வேண்டிய சாதனங்கள் பூக்கள் தம் மகரந்தச் சேர்க்கையை விடுத்துப் பிற மகரந்தச் சேர்க்கையைப் பெரிதும் விரும்புகின்றன. இதற்கென இவை மேற்கொள்ளும் சாதனங்கள் பலவும் பலதிறப்பட்டவை. Lim so #5 sofujiro, so (unisexuality): ஆண்பால் பூக்கள் தனியாகவும், பெண்பால் பூக்கள் தனியாக வும் உண்டாகுமானல், பிற மகரந்தச் சேர்க்கை தானே நிகழ வேண்டும். இது தன் மகரந்தச் சேர்க்கையை ஒதுக்கும் ஓர் அரிய சாதனம் என்று சொல்லலாம். இச் சாதனத்தில் ஆண் பூக்களும் பெண் பூக்களும் தனித்தனியாக தென்னேயில் இருப்பதுபோல ஒரே மரத்தில் உண்டாகலாம். இதை ஒரில்லமுள்ள தாவரம் (monoecious) என்பர். ஆண் பனேயும் பெண் பனேயும் தனி மரங் களாக இருப்பதுபோல, ஆண் பூக்களும் பெண் பூக்களும் தனித் தனித் தாவரங்களில் உண்டாகுமானுல், அவை ஈரில்லமுள்ள (dioecious) தாவரங்கள் எனப்படும். o தன் மலடாதல் (self-sterility) ஒரு பூவிலுள்ள தாது, அப் பூவி லுள்ள சூல்முடியில் முளேக்க இயலாது போகும். ஆல்ை, அது பிற பூவின் சூல்முடியில் முளேக்கக்கூடும். இதைத் தன் மலடு என்று கூறலாம். சில ஆர்கிட்டுப் (orchid) பூக்களில் தன் மகரந் தச் சேர்க்கையால் சூலகம் கருகிப் போய்விடும். ஆகவே, இது பிற மகரந்தச் சேர்க்கையை விழைதல் காணலாம். சில வகையான மால்வா (malwa), பாசிஃப்ளோரா (passiflora) பூக்களிலும் தன்மலடு உண்டு. - இருகால முதிர்வு (dichogamy) : இருபாலான பூக்களில் ஆனகமும் பெண்ணகமும் வெவ்வேறு காலங்களில் முதிர் கின்றன. இது இருகால முதிர்வு எனப்படும். இச் சாதனம் பிற