பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தாவரம்-வாழ்வும் வரலாறும் மகரந்தச் சேர்க்கைக்கு வழி கோலுகிறது. தன் மகரந்தச் சேர்க்கை நிகழ இயலாது. பெருந்தண் சண்பகம் (magnolia), சண்பகம் (michelia), நெட்டிலிங்கம், மனே ரஞ்சிதம் முதலிய வற்றில் பெண்ணக முன் முதிர்ச்சி (protogyny) காணப்படும். ஒமத்திலும் (carum caruvi), பூவரசு, சூரியகாந்திக் குடும்பங் களிலும் ஆண க முன்முதிர்ச்சி காணப்படுகின்றது. சமனில்லாச் சூல் தண்டு (heterostyly) : டர்நீரா (turnera) வின் ஒரே இனத்தில் இருவகைச் செடிகள் உள்ளன. இச் செடிகளில் இருவகைப் பூக்கள் உண்டாகின்றன. சூல் தண்டு நீளமான பூவில் தாதிழை குட்டையாகவும், தாதிழை நீளமான பூவில் சூல்தண்டு குட்டையாகவும் இருக்கின்றன. இந்த அமைப்புப் பிற மகரந்தச் சேர்க்கைக்குத் துனே செய்யும். சூல்முடி உயரமாக உள்ள பூவில் (படம் - 38) தாதுப் பைகள் தாமு இருப் பதால், தன் மகரந்தச் சேர்க்கை நிகழ இயலாது. தாதுப் பைகள் மேலே உள்ள பூக்களில் சூல்முடி தாழ இருப்பதால் தாது நேராகக் கீழே விழுந்து தன் மகரந்தச் சேர்க்கை நிகழக்கூடுமாயினும், தாது முன்னரே முதிர்ந்துவிடுவதால் தன் மகரந்தச் சேர்க்கை நடவாது. ஒருவேளே தாது சூல்முடியைச் சேர நேர்ந்தால், சூல்முடி முதிராமையின் தாதுச் சேர்க்கை நிகழாது போகும். 1. 2. படம் 58. வேற்றிலையில் கீல முள்ள பூக்கள் 1. நீன்ட சூல் தண்டு உடையது 2. குட்டையான சூல் தண்டு