பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகரந்தச் சேர்க்கை 127 ஆக்சாலிஸ் (oxalis), லேனம் (linum) முதலான பூக்களில் மூவகை யான உயரமுள்ள ஆணகமும் பெண்ணகப் பகுதியும் காணப் படும். 幫 35 sol–riu@ unsririb (herkogamy): 19 # 356m T3, stili (clerodendron inerme) į b6 96b 2-6ir6'r ggb gy தாதிழைகளும் ஒரு சூல்தண்டும் கிட்டத்தட்ட ஒரே உயரமானவை. தாது முதிர்ந்தவுடன் சில பூக்களில் ஐந்து தாதிழைகளும் ஒருபுறம் சாய்ந்து வளேந்திருக்கும். அதே பூவில் சூல்தண்டு நேரே நிமிர்ந்து நிற்கும். இதைப் போலவே இன்னுஞ் சில பூக்களில் தாதிழைகள் ஐந்தும் நேரே நிற்குமானல், சூல் தண்டு கீழ்நோக்கி வளேந்துவிடும். இதல்ை தன் மகரந்தச் சேர்க்கை நிகழ்வதற் கில்லே. ஆர்க்கிட்டுப் (orchid) பூக்களிலும் எருக்கம் பூவிலும் தாதுப் பை தனிப்பட்ட அமைப்பை உடையது. அதற்கு டிரான்ஸ் லேடர் (translator) என்று பெயர். இதில் இரு கிளேகள் கவை போன்றுள்ளன. கிளே நுனி அகன்று நீள்முட்டை வடிவமான தாகவும், மிக மெல்லியதாகவும் (படம் - இ) தாதுக்களைப் பெற்று இருக்கும். இதற்கு மகரந்தத் திரள் (pollinium) என்று பெயர். இதனுள்ளே பொதிந்துள்ள தாது அப் பூவின் சூல்முடியைத் தானே சேர முடியாது. ஆனகம் அப்படியே வண்டுகளின் துணையால் வேறு பூக்களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றது. மலருழக்கித் தேன் உண்ணும்போது வண்டின் கால்களில் இந்த டிரான்ஸ் லேடர் (translator) கவை மாட்டிக்கொள்ளும். கவைக் கிளேகள் (hygroscopic) ஈரம் பட்டவுடன் நெருங்கிக்கொள்ளும் இயக்கத்தை இ ய ல் பாக உடையன. வண்டின் கால் கள் எப்போதும் ஈரமாகவே இருக்கும். ஆ த லா ல், கவைக் கிளேகள் வண்டின் காலில் நன்கு நெருங்கிப் பிடித்துக்கொள்ளும். இத னுடன் வ ண் டு வேறு பூவிற்குச் செல்லும்போது அப் பூவின் சூல் முடியில் உள்ள பசையில் தாதுத் திரளே (பொலினியத்தை) ஒட்ட வைத்து விடுவதால் பிற மகரந்தச் சேர்க்கை நிகழும். -- படம் இ. தாதுத்திரள்